வியாழன், 3 நவம்பர், 2022

இயல் 5

 இயல் 5 

பலவுள் தெரிக 

1.பொருத்தமான விடையைத் தேர்க

  1. சிறுபஞ்சமூலம்-அற இலக்கியம்
  2. குடும்ப விளக்கு- தற்கால இலக்கியம் 
  3. சீவக சிந்தாமணி -காப்பிய இலக்கியம் 
  4. குறுந்தொகை -சங்க இலக்கியம்

2.மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறி 

  1. கலைக்கூடம் திரையரங்கம் ஆடுகளம் அருங்காட்சியகம்
  2. கடி உறு கூர் கழி 
  3. வினவினான் செப்பினான் உரைத்தான் பகன்றான் 
  4. இன் கூட கிறு அம்பு 

3.கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?

  1. சிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன 
  2. இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர் யார்?
  3. என்ன அண்ணே! நீங்க சொல்வதை நம்பவே முடியவில்லை!
  4. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தை புத்தகசாலைக்குத் தருக.

4.சரியான கூற்றினைத் தெரிவு செய்க.

  1. 'ஆ' என்பது எதிர்மறை இடைநிலை
  2. வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப் பேச்சு.
  3. வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்

மூன்றும் சரி 

5.பூவாது காய்க்கும். மலர்க்கை-அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை.

குறுவினா

1.தலைவியின் பேச்சில் வெளிப்படுகிற பாடுபொருள் யாது?

தலைவியின் பேச்சில் வெளிப்படுகிற பாடுபொருள் விருந்தோம்பல் ஆகும்.

2.மூவாது மூத்தவர், நூல் வல்லார் இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.

நன்மை தீமைகளை நன்கு உணர்ந்தவர், வயதில் இளையவராக இருந்தாலும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவர்.

3.நீங்கள் மிகவும் விரும்பி படித்த நூல்கள் யாவை?

  1. ஆத்திசூடி
  2. கொன்றை வேந்தன்
  3. திருக்குறள் 
  4. மணிமேகலை.

4.சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?

சாரதா சட்டம் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

சிறு வினா

1.சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

  1. ஔவையார் 
  2. ஒக்கூர் மாசாத்தியார் 
  3. ஆதிமந்தியார் 
  4. வெண்ணிக் குயத்தியார் 
  5. பொன்முடியார் 
  6. அல்லூர் நன்முல்லையார் 
  7. நக்கண்ணையார் 
  8. காக்கைப் பாடினியார் 
  9. வெள்ளிவீதியார் 
  10. காவற்பெண்டு 
  11. நப்பசலையார்

2.சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்

இன்பம் சமைப்பவர் யார்? சமையல் செய்பவர்

பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா? இல்லை 

3.விதைக்காமலே முளைக்கும் விதைகள்-இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துக்களை விளக்குக

  1. பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன.
  2. அதைப்போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்து கொள்வர்.

4. இன்றைய பெண் கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.

படிக்க வேண்டும் பெண்ணே -அப்பதான் பார்முழுதும் போற்றிடும் கண்ணே... சுயமாகச் சிந்திக்கத் துணையாகும் கல்வி சொந்தக்காலில் நின்றிடவே உடனுதவும் கல்வி...

5.மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

  1. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
  2. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் 
  3. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி 
  4. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.
  5. அடையாறில் 1930 இல் அவ்வை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

6. நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.

  1. தனித் தமிழ் பற்று உடையவர். 
  2. இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் -தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித் தமிழில் எழுத விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.




வியாழன், 14 ஜூலை, 2022

தண்ணீர்

'தண்ணீர்' கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

தண்ணீர்

உலகம்மாள் கோவில் கிணறு 

இந்திராவின் ஐயா காலத்தில் உலகம்மாள் கோவில் கிணறு மட்டுமே தண்ணீர்க் கிணறாக இருந்தது. இப்போது எல்லாமே வறண்டு விட்டது. மழை பெய்வதில்லை. பெய்தாலும் பேய் மழை. கண்மாய்கள் உடைந்து மூன்றே நாளில் பூமி வறண்டு கிடக்கும்.

பிலாப்பட்டி

நல்ல தண்ணீர் வேண்டும் என்றால் மூன்று மைல் தொலைவில் உள்ள பிலாப்பட்டிக்கு நடந்தே செல்ல வேண்டும். திரும்பி வீட்டுக்கு வரும்போது மாலை ஆகிவிடும்.

ரயில் நிலையம்

நாலு மாசத்துக்கு முன்தான் மூன்று மணிக்கு வரும் ரயிலில் தண்ணீர் பிடிக்க இந்திரா உள்ளிட்ட இளம் பெண்கள் 12 மணிக்கே ரயில் நிலையம் வரத் தொடங்கினார்கள்.

ரயிலோடு இந்திரா

ஒரு நாள் வழக்கம் போல இந்திரா பிற பெண்களை முந்திக்கொண்டு தண்ணீர் பிடிக்கக் குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். ஊதல் ஒலி கேட்டது. ரயில் புறப்படத் தொடங்கியது. இன்னும் கொஞ்சம் பிடித்தாள். ரயிலிலிருந்து குதிக்க முயன்ற இந்திராவை வடக்கத்திப் பெண் ஒருத்தி, "தற்கொலை பண்ணிக்கொள்ளவா பார்த்தாய்?" என்று சொல்வது போல உள்ளே பிடித்து இழுத்தாள்.

ஊரே தேடியது

இந்திரா வீட்டுக்கு வராததை அறிந்து இந்திராவின் உறவினர்கள் இராமநாதபுரத்தையே சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்துவிட்டு கவலையும் அசதியுமாக ஊர் திரும்பினார்கள்.

தண்ணீர்க் குடத்தோடு இந்திரா

இந்திராவின் அம்மா தண்டவாளத்தின் பின்னாலேயே ஓட ஆரம்பித்தாள். அவள் பின்னே ஊரே ஓடி வந்தது. தூரத்தில் இந்திரா இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு வருவது தெரிந்தது.