'தண்ணீர்' கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
தண்ணீர்
உலகம்மாள் கோவில் கிணறு
இந்திராவின் ஐயா காலத்தில் உலகம்மாள் கோவில் கிணறு மட்டுமே தண்ணீர்க் கிணறாக இருந்தது. இப்போது எல்லாமே வறண்டு விட்டது. மழை பெய்வதில்லை. பெய்தாலும் பேய் மழை. கண்மாய்கள் உடைந்து மூன்றே நாளில் பூமி வறண்டு கிடக்கும்.
பிலாப்பட்டி
நல்ல தண்ணீர் வேண்டும் என்றால் மூன்று மைல் தொலைவில் உள்ள பிலாப்பட்டிக்கு நடந்தே செல்ல வேண்டும். திரும்பி வீட்டுக்கு வரும்போது மாலை ஆகிவிடும்.
ரயில் நிலையம்
நாலு மாசத்துக்கு முன்தான் மூன்று மணிக்கு வரும் ரயிலில் தண்ணீர் பிடிக்க இந்திரா உள்ளிட்ட இளம் பெண்கள் 12 மணிக்கே ரயில் நிலையம் வரத் தொடங்கினார்கள்.
ரயிலோடு இந்திரா
ஒரு நாள் வழக்கம் போல இந்திரா பிற பெண்களை முந்திக்கொண்டு தண்ணீர் பிடிக்கக் குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். ஊதல் ஒலி கேட்டது. ரயில் புறப்படத் தொடங்கியது. இன்னும் கொஞ்சம் பிடித்தாள். ரயிலிலிருந்து குதிக்க முயன்ற இந்திராவை வடக்கத்திப் பெண் ஒருத்தி, "தற்கொலை பண்ணிக்கொள்ளவா பார்த்தாய்?" என்று சொல்வது போல உள்ளே பிடித்து இழுத்தாள்.
ஊரே தேடியது
இந்திரா வீட்டுக்கு வராததை அறிந்து இந்திராவின் உறவினர்கள் இராமநாதபுரத்தையே சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்துவிட்டு கவலையும் அசதியுமாக ஊர் திரும்பினார்கள்.
தண்ணீர்க் குடத்தோடு இந்திரா
இந்திராவின் அம்மா தண்டவாளத்தின் பின்னாலேயே ஓட ஆரம்பித்தாள். அவள் பின்னே ஊரே ஓடி வந்தது. தூரத்தில் இந்திரா இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு வருவது தெரிந்தது.