தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
காப்பிய நூல்களைப் படித்து, சுவைத்து, திளைத்து நெஞ்சம் அதில் ஊர்வலம் நடத்தட்டும் என்னும் பொருளில் அமைந்த,
"நிகரிலாக் காப்பிய பூவனங்கள் - உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்"
என்ற பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அகமாய் புறமாய் இலக்கியங்கள் - அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்- இலக்கியங்களின் பாடுபொருளாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?
தலைவன் தலைவியின் பெயர் கூறாமல் அன்பு வாழ்க்கையைப் பாடுவது அக இலக்கியம். தலைவன் தலைவியின் பெயரைக் குறிப்பிட்டு அரசியல், போர், வீரம், கொடை, கல்வி முதலியவற்றைப் பாடுவது புற இலக்கியம்
சிறுவினா
காலந்தோறும் தமிழ் மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
சங்க இலக்கியமாய்ச் சமைந்து, நீதி இலக்கியமாய்த் நிமிர்ந்து, காப்பியமாய்க் கனிந்து, பக்தி இலக்கியமாய்ப் பரவி, சிற்றிலக்கியமாய் விரிந்து, சித்தர்களின் சிந்தனையில் ஒளிர்ந்து, புதுக்கவிதையின் நறுமணத்தைப் பரப்பி, செந்தமிழாய்ச் செழுந்தமிழாய்ச் சிறந்து விளங்குகிறது.
புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்- உங்கள் பங்கினை குறிப்பிடுக.
- அகம்புறம் என்னும் சங்க இலக்கியங்களைப் படிப்பேன். இலக்கணங்களைக் கற்றுத் தெளிவேன். காப்பியங்களைப் படித்து சுவைப்பேன்.
- நீதி நூல்களைக் கற்று நெறிப்பட வாழ்வேன்.
- சித்தர் பாடல்களைக் கற்று, சிந்தனையை விரிவாக்குவேன்.
- புதிது புதிதாக விளைந்துள்ளவற்றை எளிய நடையில் படங்களுடன் சுவடி செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வேன்.