திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.
ஒப்பியல் ஆய்விற்குப் பெருந்துணை- தமிழே
- திராவிட மொழிகளில் தமிழே மிகவும் தொன்மையானது
- திராவிட மொழிகளில் தமிழே இலக்கிய வளமும் இலக்கணச் சிறப்பும் வாய்ந்தது
- திராவிட மொழிகளில் பிறமொழித் தாக்கம் குறைவாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும்
- திராவிட மொழிகளில் சிலவற்றின் தாய் மொழியாகத் தமிழே விளங்குகிறது
- திராவிட மொழிகளில் தனித்துவமான இலக்கணச் சிறப்பைப் பெற்றுத் தனித்து இயங்கும் மொழி தமிழே ஆகும்.
- திராவிட மொழிகளில் ஒருபொருட் பன்மொழிச் சொற்கள் மிகுதியாகப் பெற்ற மொழி தமிழே ஆகும்.
- இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச் சான்றுகளில் பெரும்பாலானவை தமிழ்க்கல்வெட்டுகளே ஆகும்.
- தமிழ் மொழியில் உள்ள அடிச்சொற்களின் ஒலியன்கள் பிற திராவிட மொழிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெயர்ந்துள்ளன எ.கா.
- மூன்று -தமிழ்
- மூணு- மலையாளம்
- மூடு-தெலுங்கு
- மூரு-கன்னடம்
- மூஜி-துளு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக