புதன், 11 செப்டம்பர், 2024

மெல்லக் கற்போர் 3,4 காலாண்டுத் தேர்வு

 ஒன்பதாம் வகுப்பு இயல் 3

பலவுள் தெரிக

1.பொருந்தாத இணை எது? திருவாரூர்- கரிக்கையூர்

2.முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக. தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல் 

3.பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்- எட்டு பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

4.ஐம்பெருங்குழு, எண்பேராயம்- சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம். தொகைச்சொற்கள் 

5.சொற்றொடர்களை முறைப்படுத்துக. ஆ, அ, இ

குறுவினா 

1.நீங்கள் வாழும் பகுதியில் ஏறு தழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

  1. மாடு பிடித்தல்
  2. மாடு விடுதல் 

2.தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்? 

பழந்தமிழரின் வாழ்க்கை முறையை

  1. புரிந்து கொள்ள
  2. அதன்படி வாழ

அகழாய்வு செய்ய வேண்டும் 

3.ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக 

  1. ஏறுகோள்
  2. எருதுகட்டி

4.பழமணல் மாற்றுமின்; புது மணல் பரப்புமின்- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம் :மணிமேகலை விழாவறை காதை

பொருள்: தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்

5.பட்டிமண்டபம், பட்டிமன்றம்- இரண்டும் ஒன்றா? விளக்கம் தருக.

  1. பட்டிமண்டபம் என்பது இலக்கிய வழக்கு.  
  2. பட்டிமன்றம் என்பது பேச்சு வழக்கு. 

6.ஏறு தழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

  1. சேலம் 
  2. கரிக்கையூர் 
  3. கல்லூத்து மேட்டுப்பட்டி
  4. சித்திரக்கல் புடவு

சிறுவினா

1.வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளுக்குப் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

2.ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

  1. முல்லை- மேய்ச்சல் 
  2. மருதம்- உழவு
  3. பாலை- போக்குவரத்து 

3.வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துக்களைத் தொகுத்துரைக்க.

  1. முன்னோர்கள் பெற்ற அறிவை அறிய,
  2. இன்றைய தலைமுறை எடுத்துக் கொண்டு சிறப்பாக வாழ

அகழாய்வு தேவை

4.உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

இந்திர விழாவைப் போலவே எங்கள் ஊரிலும் 

  1. தோரணங்கள் கட்டி. 
  2. பந்தலைக் கட்டி 
  3. வாழையை நட்டு
  4. தோரணம் தொங்க விடுவோம்

நெடுவினா

1.ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

ஏறுதழுவுதலும் தமிழர் அறமும்

  1. ஸ்பெயின் நாட்டில் காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். 
  2. அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு. 
  3. ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை கொல்லப்படுவதும் உண்டு. 
  4. இது மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.
  5. தமிழகத்தில் நடைபெறும் ஏறுதழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக்கூடாது. 
  6. காளைகளுக்கு வழிபாடு செய்வர். 
  7. காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். 
  8. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் விளையாட்டு இது. 
  9. காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவார்.

2.பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

பண்பாட்டுக் கூறுகளைப் பேணுவோம் !

முன்னுரை:

“தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்கிறார் நாமக்கல் கவிஞர்.  

நாம் செய்ய வேண்டிய செயல்கள்:

  1. தமிழர்தம் கவின்கலைகளை ஆதரித்துப் போற்ற வேண்டும்.
  2. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  3. தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைக்க வேண்டும்.
  4. புதிய கலைஞர்களை ஊக்குவித்தல் வேண்டும் 
  5. திருவிழாக்களில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீரவிளையாட்டுகள் நடத்தப்பட வேண்டும்.

முடிவுரை:

யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பண்பாடு கொண்டவர்கள் நாம். அத்தகைய பண்பாட்டை நம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

பொன்மொழிகளை மொழிபெயர்க்க

1.Nation’s culture resides in the hearts and in the soul of its people 

ஒரு நாட்டின் பண்பாடு அங்கு வாழும் மக்களின் இதயங்களிலும் உயிரிலும் கலந்துள்ளது.

2.The art of people is a true to mirror to their minds 

கலை, மக்களின் மனத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி

3.The biggest problem is the lack of love and charity 

அன்பும் தொண்டும் குறைந்து வருவது ஆபத்தானது.

4.You have to dream before your dreams can come true 

உன்னுடைய கனவு நனவாகும்வரை கனவு காணுங்கள் 

5.Winners don't do different things they do things differently

வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாகச் செய்வார்கள்.

மரபு இணைச் சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.

1.மேடும் பள்ளமும்- வாழ்க்கை மேடும் பள்ளமும் நிறைந்தது

2.நகமும் சதையும்-நானும் என்நண்பனும் நகமும் சதையும் போல சேர்ந்தே இருப்போம்.

3.முதலும் முடிவும்-கட்டுரையில் முதலும் முடிவும் சிறப்பாக அமைய வேண்டும்

4.கேளிக்கையும் வேடிக்கையும்-எங்கள் ஊர்த்திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்தது

5.கண்ணும் கருத்தும்-நான் படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தேன்

6.மேலும் கீழும்-சிட்டுக்குருவி மேலும் கீழுமாகப் பறக்கிறது 

உங்கள் பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக

தொகுப்புரை

இலக்கியமன்ற விழா

எங்கள் பள்ளியில் கல்விவளர்ச்சிநாளை முன்னிட்டு இலக்கியமன்ற விழா 15-07-2024 அன்று காலை 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. தமிழாசிரியர் அனைவரையும் “வருக வருக” என வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். தாவரவியல் ஆசிரியர் கல்வியின் சிறப்புகள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவ மாணவிகள் காமராசரை பற்றிப் பேசினார்கள். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விலங்கியல் ஆசிரியர் நன்றி கூறினார். நாட்டுபண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது

மொழியோடு விளையாடுக

பொருள் எழுதித் தொடரமைக்க

1.கரை-கடற்கரை-கடற்கரையில் மக்கள் கூடிமகிழ்ந்தனர்.

2.கறை-அழுக்கு-ஆடையில் கறை படிந்திருந்தது

3.குளவி- தேனீ வகை- என் வீட்டில் தேன்குளவி கூடுகட்டியது

4.குழவி-குழந்தை-குழவி பசியால் அழுதது

5.வாளை-வாளை மீன்- குளத்தில் வாளை மீன் துள்ளி விழுந்தது.

6.வாழை- வாழைமரம்- வாழைப்பழம் இனிக்கும்.

7.பரவை- கடல்- பரவை மீது பறவைகள் பறந்தன.

8.பறவை- பறக்கும் உயிரினங்கள்- பறவை பறந்தது.

9.மரை- மான்- மான் துள்ளி ஓடியது

10.மறை- ஒளிந்து இரு- அறியாமை மறைந்துவிட்டது.

11.அலை-கடலலை-கடலில் அலை அதிகமாக இருக்கிறது.

12.அழை -கூப்பிடு-நான் அழைத்தேன்

அகராதியில் காண்க

இயவை -வழி

சந்தப்பேழை-சந்தன பெட்டி

சிட்டம்- ஞானம்

தகழ்வு- ஆடம்பரம்

பௌரி- பண்வகை

நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள் 

  1. கீழே விழுந்த நண்பனைத் தூக்கி விட்ட போது 
  2. வாசிக்கத் தெரியாத நண்பனுக்கு வாசிக்கக் கற்றுத் தந்தபோது
  3. வயதான பாட்டிக்கு உதவி செய்தபோது 
  4. பார்வையற்றவர்க்கு உதவி செய்தபோது 
  5. வீட்டு வேலைகளைப் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டபோது

திருக்குறள்

குறுவினா 

1.நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்? 

தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது.

2.தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

தீயவை தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்சவேண்டும்.

3.ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக 

மோனை

ஒற்றொற்றித்

ஒற்றினால்

எதுகை 

ஒற்றொற்றித்

ஒற்றினால்

4.கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

செயல் வேறு சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.

கலைச்சொல் தருக 

  1. Excavation -அகழாய்வு
  2. Epigraphy -கல்வெட்டியல்
  3. Hero stone -நடுகல்
  4. Cultural symbol -பண்பாட்டுக் குறியீடு
  5. Embossed sculpture -புடைப்புச் சிற்பம்
  6. Inscription-பொறிப்பு

இயல் 4

பலவுள் தெரிக

1.கீழ்காணும் மூன்று தொடர்களுள் 

அ.)இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய இந்திய நிறுவனம் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும் 

ஆ.)வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.

இ.)திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.

அ,இ ஆகியன சரி; ஆ தவறு

2.தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வு தேர்வு எது? ஊரகத் திறனறிவுத்தேர்வு

3.ஒன்றறிவதுவே உற்று அறிவதுவே இரண்டு அறிவதுவே அதனொடு நாவே. இவ்வடிகளில் அதனொடு என்பதை எதைக் குறிக்கிறது? தொடு உணர்வு

4.பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க. அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன். எல்லா கோளிலும் ஏற்றப்படுவேன். இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர். தமிழ் 

5.விடை வரிசையை தேர்க.

இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும். இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.

சித்தாரா, நேவிக்

குறுவினா

1.கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக

கூட்டுபுழு தான் பட்டுப் பூச்சியாய் கோலம் கொள்ளும் மறவாதீர்! காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர்!

2.இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக 

  1. தானியங்கிப் பண இயந்திரம்
  2. அட்டை தேய்ப்பி இயந்திரம் 
  3. தமிழக அரசின் நியாயவிலைக் கடை- திறனட்டை கருவி 
  4. ஆளறி சோதனைக் கருவி
  5. அருகலை அச்சுப்பொறி இயந்திரம் 

3.மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே. இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும் மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

  1. மூவறிவு-கரையான், எறும்பு 
  2. நான்கறிவு-நண்டு, தும்பி
  3. ஐந்தறிவு -பறவை, விலங்கு

4.செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது?

வாகனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.

சிறுவினா

1.‘என் சமகாலத் தோழர்களே‘ கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள். 

கரிகாலன் தன் பெருமை எல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள். 

ஏதும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள். 

ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

2.அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?

  1. ஓரறிவு -புல், மரம் 
  2. ஈரறிவு- சிப்பி, நத்தை 
  3. மூவறிவு- கரையான், எறும்பு 
  4. நான்கறிவு- நண்டு, தும்பி 
  5. ஐந்தறிவு -பறவை, விலங்கு 
  6. ஆறறிவு- மனிதன்

3.பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.

  1. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேசிய திறனறித் தேர்வு, 
  2. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி மற்றும் கல்வி உதவித்தொகைத் தேர்வு, 
  3. கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத் திறனறித் தேர்வு ஆகியவை நடத்தப்படுகின்றன. 
  4. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.

4.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக் கோளின் பங்கு யாது?

இப்போது நாம் திறன் பேசிகளைப் பயன்படுத்துகிறோம். தானியக்க பண இயந்திரம், அட்டை பயன்படுத்தும் இயந்திரம் இதற்கெல்லாம் செயற்கைக்கோள் பயன்படுகிறது. 

மக்கள் பயன்படுத்தும் இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் அவசியம் தேவை. 

நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குச் செயற்கைக் கோள்கள் பயன்படுகின்றன.

5.வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

தோப்புக்கள்- தோப்புகள்.

கத்தி கொண்டு வந்தான்- கத்திக் கொண்டு வந்தான். 


மேற்கண்ட சொற்களில் வல்லினம் மிகும் போது ஒரு பொருளும் மிகாத போது வேறொரு பொருளும் வருவதை அறியலாம். 

நாம் பேசும்போதும் எழுதும் போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.

நெடுவினா

1.அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.

ஆளறிச் சோதனைக் கருவி

ஆளறிச் சோதனைக் கருவி மனிதனின் கைரேகை, முகம், விழித்திரை ஆகியவற்றில் ஒன்றையோ அனைத்தையுமோ அடையாளமாக பதிவு செய்யவும் பதிவு செய்த அடையாளம் மூலம் மறுபடி ஆளை அறியவும் பயன்படுகிறது. 

நடுவண் அரசின் ஆதார் அடையாள அட்டையைப் பெறுவதற்கு நம்முடைய ஒளிப்படத்தையும் விழித்திரையையும் இரு கைகளின் பத்து விரல் ரேகைகளையும் பதிவு செய்கிறோம். 

அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வருகைப்பதிவுக்காகவும் வெளியேறுகைப் பதிவிற்காகவும் இக்கருவி பயன்படுகிறது.

இணைய வணிகம் 

இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979 இல் இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார். 

இது இணைய உலகின் மற்றொரு பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. 

1989இல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக் கடை தொடங்கப்பட்டது. 

1991ல் இணையம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. 

இன்று இணைய நிறுவனங்கள் விற்காத பொருள்கள் எதுவும் உலகில் இல்லை. 

கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில் விற்கப்படுகின்றன. 

இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது

2.இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க.

இந்திய விண்வெளித் துறை

  1. 1983 ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி திட்டம் ஆரம்பம் 
  2. சித்தாரா செயலி பயன்படுத்தப் படுகிறது.
  3. விளைச்சலை கணிக்க
  4. நீரின் அளவைக் கணக்கிட 
  5. மீன் வளத்தை கணக்கிட
  6. மக்கள் பயன்படுத்தும் இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் தேவை. 
  7. குறைந்த செலவில் மக்களுக்குத் தரமான சேவை
  8. இதுவரை இந்தியாவுக்காக 45 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. 
  9. நேவிக்  மீனவர்களுக்காக  
  10. இந்தியா மறு பயன்பாட்டிற்கு ஏற்ற ஏவு ஊர்திகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது 
  11. ஜி எஸ் எல் வி மார்க் 2 ஏவுகணை 3 டன்கள் சுமக்கும். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை 6 டன்கள் வரை சுமக்கும் 
  12. சந்திராயன் 2 நிலவில் இறங்கி ஆராய்ந்தது. 
  13. 2013இல் மங்கள்யான் திட்டம் உருவானது. 
  14. மூன்று ஆண்டுகள், 7 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என இஸ்ரோவில் மூன்று வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்.

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க 

Bottle xylophone: music music with bottles 

You will need :6 glass bottles, wooden spoon, water, food colouring

Fill one bottle with water, then fill each other bottle with slightly less than the bottle next to it. 

Add some food colouring to help you to see the different levels of water 

Tap the bottles with the end of a wooden spoon. Can you play a tune?

Water music 

Hitting the bottles with the spoon Makes them vibrate and produce a sound. The more the bottle vibrates, higher the note will be. The more water in a bottle, the less it vibrates, so less water means higher notes.

குடுவை இசைக்கருவி: 

குடுவை இசையை உருவாக்குவோம்.

தேவையானவை: 6 கண்ணாடிக் குடுவைகள், மரத்தாலான சிறுகரண்டி ஒன்று, சில உணவு நிறமூட்டிகள்

முதல் குடுவையை முழுவதுமாக நீரால் நிரப்பவும். அடுத்தடுத்த குடுவைகளில் நீரின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ளவும்.

நீரின் வெவ்வேறு மட்டங்களை அறிந்து கொள்வதற்காக அவற்றில் உணவு நிறமூட்டிகளைச் சேர்க்கவும்.

மரத்தாலான சிறுகரண்டியின் மறுமுனையால் குடுவைகளைத் தட்டவும். இசையை உருவாக்க முடிகிறதா?

நீர் இசை

மரத் தேக்கரண்டியால் குடுவைகளைத் தட்டும் போது அவை அதிர்ந்து ஓசையை எழுப்புகின்றன. அதிகமாக அதிரும் குடுவை அதிக ஓசையை எழுப்புகிறது. அதிக நீர் உள்ள குடுவை குறைவாக அதிர்ந்து குறைந்த ஓசையையும் குறைந்த நீர் உள்ள குடுவை அதிகமாக அதிர்ந்து அதிக ஓசையையும் எழுப்புகிறது. 

நயம் பாராட்டுக

பரிதி வாழி

திரண்ட கருத்து:

கதிரவன் பொங்குகிறது; பொலிகிறது; பிடரிமயிர் சிலிர்க்கும் சிங்கம் போன்று காட்சியளிக்கிறது; வான வீதியில் திகுதிகுவென நெருப்புப் பிழம்பாக எரிகிறது; மாணிக்கக் குன்றாக, தங்கத்தின் தட்டாக, வானத்தின் விளக்காக ஒளிர்கிறது. கடல், வானம், மலை, காடு, பொய்கை, ஆறு என எல்லா இடங்களிலும் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகிற கதிரவன் வாழ்க.

சொல் நயம்

இப்பாடலில்,”மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த தங்கத்தின் தட்டே!” என்ற அழகான சொற்கள் பயின்று வந்துள்ளன.

சந்த நயம்

இப்பாடலில்,”மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே!” என்ற இடத்தில் சந்த நயம் பயின்று வந்துள்ளது. 

தொடை நயம் 

இப்பாடலில் மோனை, எதுகை, இயைபு ஆகிய நயங்கள் பயின்று வந்துள்ளன.

மோனை

பொங்கியும் 

பொலிந்தும் 

எதுகை

பொங்கியும் 

மங்காத

இயைபு

சிலிர்க்கும்

எரிக்கும் 

அணி நயம் 

இப்பாடலில் உயர்வு நவிற்சிஅணி பயின்று வந்துள்ளது

மொழியோடு விளையாடு

அகராதியில் காண்க 

1. இமிழ்தல் -ஒலித்தல்

2. இசைவு-இணக்கம்

3. துவனம் -நெருப்பு

4. சபலை-மின்னல்

5. துகலம் -நுட்பமான ஒலி

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக 

1.எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன் இடத்தை விட்டு அகல் 

2.எனக்கு கால்பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழ ஈரம்; பார்த்து உன் காலை வை.

3.கைக் பொருளைக் கடல் அலையில் தொலைத்து விட்டுக் கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?

4.வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும். வெளியில் அதனை கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.

5.எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக. 

1.மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.

2.பாதையில் குவிந்து கிடந்த மணலை அள்ளி ஓரமாகக் குவித்து வைத்தான் 

3.பிரிந்திருந்த நண்பர்களை நாம் ஒன்று சேர்ந்து சேர்த்து வைப்போம்.

4.பணிந்து நடவாத பணியாளரை, “உள்ளே வராதே” என அலுவலர் பணித்தார்

5.பொருந்தும் இடங்களை கண்டு பொருத்துக. 

6.மாறுதல் வேண்டியவர்களை உடனடியாக மாற்றுப் பணியில் அமர்த்துக. 

கலைச்சொல் தருக 

  1. launch vehicle ஏவு ஊர்தி
  2. missile ஏவுகணை
  3. nautical mile கடல் மைல்
  4. video conference காணொளிக் கூட்டம்
  5. download பதிவிறக்கம்
  6. passenger name record பயணியர் பெயர்ப் பதிவு
  7. electronic devices மின்னணுக் கருவிகள் 

புதன், 4 செப்டம்பர், 2024

மெல்லக் கற்போர் இயல் 3,4

ஒன்பதாம் வகுப்பு இயல் 3,4

பலவுள் தெரிக

1.பொருந்தாத இணை எது? திருவாரூர்- கரிக்கையூர்

2.முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக. தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல் 

3.பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்- எட்டு பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

4.ஐம்பெருங்குழு, எண்பேராயம்- சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம். தொகைச்சொற்கள் 

5.சொற்றொடர்களை முறைப்படுத்துக. ஆ, அ, இ

குறுவினா 

1.நீங்கள் வாழும் பகுதியில் ஏறு தழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

  1. மாடு பிடித்தல் 
  2. மாடு அணைதல் 
  3. மாடு விடுதல் 
  4. மஞ்சுவிரட்டு 

2.தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்? 

  1. பழந்தமிழரின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள, 
  2. அதன்படி வாழ,
  3. அகழாய்வு செய்ய வேண்டும் 

3.ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக 

  1. ஏறுகோள்
  2. எருதுகட்டி

4.பழமணல் மாற்றுமின்; புது மணல் பரப்புமின்- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம் :மணிமேகலை விழாவறை காதை

பொருள்: விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்

5.பட்டிமண்டபம், பட்டிமன்றம்- இரண்டும் ஒன்றா? விளக்கம் தருக.

  1. பட்டிமண்டபம் என்பது இலக்கிய வழக்கு.  
  2. பட்டிமன்றம் என்பது பேச்சு வழக்கு. 

6.ஏறு தழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

  1. சேலம் 
  2. கரிக்கையூர் 
  3. கல்லூத்து மேட்டுப்பட்டி
  4. சித்திரக்கல் புடவு

சிறுவினா

1.வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

  1. உழவர்கள் அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளுக்குப் பொங்கல் வைத்து ஊட்டினர். 
  2. இதுவே மாட்டுப்பொங்கல் வழிபாடாகவும் ஏறுதழுவுதல் பண்பாடாகவும் நீட்சி அடைந்தது.

2.ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

  1. ஏறுதழுவுதல் முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் 
  2. மருதநிலத்து வேளாண்குடிகளின் தொழில் உற்பத்தியோடும் 
  3. பாலை நிலத்து மக்களின் போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்து இருந்தது.

3.வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துக்களைத் தொகுத்துரைக்க.

  1. நமது முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை அறிய,
  2. நமது பண்பாட்டின் மேன்மைகளை இன்றைய தலைமுறை எடுத்துக் கொண்டு சிறப்பாக வாழ
  3. அகழாய்வு என்பது தேவையான ஒன்று.

4.உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

இந்திர விழாவைப் போலவே எங்கள் ஊரிலும் 

  1. தோரணங்கள் கட்டுவோம். 
  2. பந்தல்கட்டி வாழை நடுவோம். 
  3. ஒலிபெருக்கிக் குழாய்கள் கட்டுவோம்.
  4. வண்ணவிளக்குகள் ஒளிர விடுவோம்

நெடுவினா

1.ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க. 

ஏறுதழுவுதலும் தமிழர் அறமும்

  1. ஸ்பெயின் நாட்டில் காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். 
  2. அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு. 
  3. ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை கொல்லப்படுவதும் உண்டு. 
  4. இது மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.
  5. தமிழகத்தில் நடைபெறும் ஏறுதழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக்கூடாது. 
  6. காளைகளுக்கு வழிபாடு செய்வர். 
  7. காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். 
  8. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் விளையாட்டு இது. 
  9. காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவார்.

2.பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

பண்பாட்டுக் கூறுகளைப் பேணுவோம் !

முன்னுரை:

“தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்கிறார் நாமக்கல் கவிஞர். சீரிய சிந்தனைகளையும் உயர்ந்த பண்பாடுகளையும் கொண்ட தமிழரின் பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதற்கு நாம் செய்ய வேண்டிய செயல்கள்:

  1. தமிழர்தம் கவின்கலைகளை ஆதரித்துப் போற்ற வேண்டும்.
  2. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  3. தொல்பொருள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைக்க வேண்டும்.
  4. புதிய கலைஞர்களை ஊக்குவித்தல் வேண்டும் 
  5. இளம் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்தல் வேண்டும் 
  6. கலை விழாக்கள் நடத்துதல் வேண்டும்.
  7. விருதுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
  8. தமிழர்தம் பண்பாட்டுக்கூறுகள் ஆவணமாக்கப்பட வேண்டும்.
  9. சுற்றுலாக்களில் தமிழர்தம் பண்பாட்டை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
  10. பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
  11. திருவிழாக்களில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீரவிளையாட்டுகள் நடத்தப்பட வேண்டும்.

முடிவுரை:

யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற உலகில் எங்கும் காண முடியாத உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள் நாம். அத்தகைய பண்பாட்டை நம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.


பொன்மொழிகளை மொழிபெயர்க்க

1.Nation’s culture resides in the hearts and in the soul of its people 

ஒரு நாட்டின் பண்பாடு அங்கு வாழும் மக்களின் இதயங்களிலும் உயிரிலும் கலந்துள்ளது.

2.The art of people is a true to mirror to their minds 

கலை, மக்களின் மனத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி

3.The biggest problem is the lack of love and charity 

அன்பும் தொண்டும் குறைந்து வருவது ஆபத்தானது.

4.You have to dream before your dreams can come true 

உன்னுடைய கனவு நனவாகும்வரை கனவு காணுங்கள் 

5.Winners don't do different things they do things differently

வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாகச் செய்வார்கள்.

வடிவம் மாற்றுக

டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இங்குக் கல்லாகிப்போன டைனோசர் முட்டைகள், பாறைபாபடிவமாக கிடைத்த கடல்நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன‌ உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கிற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊருகளாய்த் திகழ்கின்றன.

1.மரபு இணைச் சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.

மேடும் பள்ளமும்- வாழ்க்கை மேடும் பள்ளமும் நிறைந்தது

2.நகமும் சதையும்-நானும் என்நண்பனும் நகமும் சதையும் போல சேர்ந்தே இருப்போம்.

3.முதலும் முடிவும்-கட்டுரையில் முதலும் முடிவும் சிறப்பாக அமைய வேண்டும்

4.கேளிக்கையும் வேடிக்கையும்-எங்கள் ஊர்த்திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்தது

5.கண்ணும் கருத்தும்-நான் படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தேன்

6.மேலும் கீழும்-சிட்டுக்குருவி மேலும் கீழுமாகப் பறக்கிறது 


உங்கள் பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக

தொகுப்புரை

இலக்கியமன்ற விழா

எங்கள் பள்ளியில் கல்விவளர்ச்சிநாளை முன்னிட்டு இலக்கியமன்ற விழா 15-07-2024 அன்று காலை 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. தமிழாசிரியர் அனைவரையும் “வருக வருக” என வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். தாவரவியல் ஆசிரியர் கல்வியின் சிறப்புகள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவ மாணவிகள் காமராசரை பற்றிப் பேசினார்கள். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விலங்கியல் ஆசிரியர் நன்றி கூறினார். நாட்டுபண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

1.பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரே விடையை தருக. காங்கேயம்

2.பொருந்தாத சொல்லைக் கண்டறிக. இலங்கை

3.பிரித்து எழுதுக கண்டெடுக்கப்பட்டுள்ளன= கண்டு+எடுக்கப்பட்டு+ உள்ளன

4.தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாக காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன-இது எவ்வகைத் தொடர்? செய்தித்தொடர்

மொழியோடு விளையாடுக

பொருள் எழுதித் தொடரமைக்க

1.கரை-கடற்கரை-கடற்கரையில் மக்கள் கூடிமகிழ்ந்தனர்.

2.கறை-அழுக்கு-ஆடையில் கறை படிந்திருந்தது

3.குளவி- தேனீ வகை- என் வீட்டில் தேன்குளவி கூடுகட்டியது

4.குழவி-குழந்தை-குழவி பசியால் அழுதது

5.வாளை-வாளை மீன்- குளத்தில் வாளை மீன் துள்ளி விழுந்தது.

6.வாழை- வாழைமரம்- வாழைப்பழம் இனிக்கும்.

7.பரவை- கடல்- பரவை மீது பறவைகள் பறந்தன.

8.பறவை- பறக்கும் உயிரினங்கள்- பறவை பறந்தது.

9.மரை- மான்- மான் துள்ளி ஓடியது

10.மறை- ஒளிந்து இரு- அறியாமை மறைந்துவிட்டது.

11.அலை-கடலலை-கடலில் அலை அதிகமாக இருக்கிறது.

12.அழை -கூப்பிடு-நான் அழைத்தேன்

அகராதியில் காண்க

  1. இயவை -வழி
  2. சந்தப்பேழை-சந்தன பெட்டி
  3. சிட்டம்- ஞானம்
  4. தகழ்வு- ஆடம்பரம்
  5. பௌரி- பண்வகை

பொருள் தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக 

வைக்காதீர்கள் 

கால்களை வைக்காதீர்கள் 

கவனக்குறைவுடன் கால்களை வைக்காதீர்கள் 

மழைக்காலங்களில் கவனக் குறைவுடன் கால்களை வைக்காதீர்கள் 

அறுந்த மின்கம்பிகள் மீது மழைக்காலங்களில் கவனக் குறைவுடன் கால்களை வைக்காதீர்கள்


குறுக்கெழுத்துப் புதிர் 

1.விழாவறை காதை குறிப்பிடும் விழா- இந்திர விழா 

2.சரி என்பதற்கான எதிர்ச்சொல் -தவறு 

3.பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று-தவளை ஓட்டம் 

4.ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல்-விதி

5.மா+அடி=மாவடி

6.கொள்ளுதல் என்பதன் முதல் நிலை திரிந்த சொல்—கோள்

7.தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்-சிரை

8.ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம்-ஆய்வு

9.மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர் -சாத்தனார்

10.சல்லிக்கட்டு விளையாட்டுக்கு உரிய விலங்கு- காளை

11.தனி+ஆள்=தனியாள்

12.தமிழர்களின் வீர விளையாட்டு- ஏறுதழுவுதல் 

13.இவள்+ஐ=இவளை

14.மரத்தில் காய்கள் திரட்சி ஆகக் காய்த்திருந்தன

15.ஆடிப்பட்டம் தேடி- விதை 

16.உரிச்சொற்களுள் ஒன்று -தவ

17.நனி சிறந்தது

18.நேரத்தை குறிப்பிடும் வானியல் சொல்- ஓரை 

19.அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை-சாடிகள்

20.காய் பழுத்தால்- கனி 

21.ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது -வத்தி

22.யா முதல்வரும் வினாப்பெயர்- யாது 

23.தகவிலர் என்பதற்கு எதிர்ச் சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது- தக்கார்

நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள் 

  1. கீழே விழுந்த நண்பனைத் தூக்கி விட்ட போது 
  2. வாசிக்கத் தெரியாத நண்பனுக்கு வாசிக்கக் கற்றுத் தந்தபோது
  3. வயதான பாட்டிக்கு உதவி செய்தபோது 
  4. பார்வையற்றவர்க்கு உதவி செய்தபோது 
  5. வீட்டு வேலைகளைப் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டபோது

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகலாமா? 

1.பெட்டிச் செய்தி -பெட்டியினுள் உள்ள செய்தி-ஏழாம்வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்

2.விழாக் குழு -விழாவை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட குழு-இரண்டாம்வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்

3.கிளிப் பேச்சு -கிளி போன்ற பேச்சு- உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.

4.தமிழ்த் தேன் சில-உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்

5.தைப்பூசம்-ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்

6.கூடக் கொடு –‘கூட’ என்னும் சொல்லுருபின் பின் வல்லினம் மிகும்

7.கத்தியைவிடக் கூர்மை-‘விட’ என்னும் சொல்லுருபின் பின் வல்லினம் மிகும்

8.கார்ப்பருவம் -ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்

தொடர் தரும் பொருளைக் கூறுக

1.சின்னக்கொடி-சின்னத்தை உடைய கொடி. சின்னகொடி -அளவில் சிறிய கொடி

2.தோப்புக்கள்-தோப்பில் உள்ள கள். தோப்புகள் -பல வகையான தோப்புகள்

3.கடைப்பிடி-பின்பற்று. கடைபிடி-கடை ஒன்றை வாடகைக்குப் பிடி. 

4.நடுக்கல்-நடுவில் உள்ள கல். நடுகல் -இறந்தோருக்கு நடப்படும் கல்.

5.கைம்மாறு-உதவி. கைமாறு -கையில் உள்ள மாறு

6.பொய்ச்சொல்-பொய்யான சொல். பொய்சொல் -பொய் ஒன்றைச் சொல்

சிந்தனை வினா 

1.வல்லினம் மிக வேண்டியதன் முக்கியத்துவத்தை எழுதுக. 

வல்லினம் மிக வேண்டிய இடத்தில் வல்லின மெய் இடாமல் எழுதுவதால் பொருள் மயக்கம் உண்டாகிறது. இதனால் மொழியின் சிறப்புக் குன்றுகிறது. இதனைத் தவிர்க்க வல்லினம் மிக வேண்டிய இடத்தில் வல்லினமெய்களை இட்டு எழுத வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

2.உரிய இடங்களில் வல்லினமெய்களை எட்டும் நீக்கியும் எழுதுக

பழங்கால மக்களின் நாகரீகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்ற பொருள்களும் உறுதிப்படுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகிற இடங்களில் கீழடியும் ஒன்று.

கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்குக் குறைவான எண்ணிக்கையில்தான் தங்கத்தினாலான பொருள்கள் கிடைக்கின்றன. 

மேலும் இரும்பைப் பயன்படுத்திச் செய்த கோடாரி, குத்தீட்டிகள் முதலான கருவிகளும் யானைத் தந்தத்தினால் செய்த சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள், கண்ணாடிப் பொருள்களில் உருவாக்கிய மணிகள், வளையல், தோடு போன்றவையும் கிடைத்துள்ளன.

திருக்குறள்

1.படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

2.பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்

3.பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக 

பசும்மண் கலத்து நீர் பெய் திரீஇ யற்று-சுடாத மண் கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல 

தத்தம் கருமமே கட்டளைக்கல்-ஒருவரின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்

அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்-அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்

4.தீரா இடும்பை தருவது எது? ஆராயாமை, ஐயப்படுதல்

சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக 

1.நுணங்கிய கேள்வியர்-நுட்பமான கேள்வியறிவு உடையவர்-நுட்பமான கேள்வி அறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப் பேசுவது அரிது 

2.பேணாமை- பாதுகாக்காமை-தகாத செயலுக்கு வெட்கப்படாமை, தக்கவற்றை நாடாமை, பிறரிடம் அன்பு இல்லாமை, ஏதொன்றையும் பாதுகாக்காமை ஆகியவை பேதையின் செயல்கள்.

3.செவிச்செல்வம்- கேட்பதால் பெரும் அறிவு-செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச் செல்வம். 

4.அறனல்ல செய்யாமை- அறம் அல்லாத செயல்களைச் செய்யாது இருத்தல்-பிறர் தனக்குத் தரக்கூடாத துன்பத்தைத் தந்தாலும் மனம் நொந்து அறம் அல்லாத செயல்களைச் செய்யாமல் இருப்பதே நன்றாம்

குறுவினா 

1.நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்? 

தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது.

2.தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

தீயவை தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்சவேண்டும்.

3.ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக 

மோனை

ஒற்றொற்றித்

ஒற்றினால்

எதுகை 

ஒற்றொற்றித்

ஒற்றினால்

4.கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

செயல் வேறு சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.

5.கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக

ஓதி உணர்ந்தும் பிறர்க் குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.

பிறருக்கு அறிவுரை வழங்கியும் தான் அதன்படி செயல்படாமல் இருப்பவன் பேதையிலும் பேதையாவான்

கலைச்சொல் தருக 

  1. Excavation -அகழாய்வு
  2. Epigraphy -கல்வெட்டியல்
  3. Hero stone -நடுகல்
  4. Cultural symbol -பண்பாட்டுக் குறியீடு
  5. Embossed sculpture -புடைப்புச் சிற்பம்
  6. Inscription-பொறிப்பு

இயல் 4

பலவுள் தெரிக

1.கீழ்காணும் மூன்று தொடர்களுள் 

அ.)இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய இந்திய நிறுவனம் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும் 

ஆ.)வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.

இ.)திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.

அ,இ ஆகியன சரி; ஆ தவறு

2.தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வு தேர்வு எது? ஊரகத் திறனறிவுத்தேர்வு

3.ஒன்றறிவதுவே உற்று அறிவதுவே இரண்டு அறிவதுவே அதனொடு நாவே. இவ்வடிகளில் அதனொடு என்பதை எதைக் குறிக்கிறது? தொடு உணர்வு

4.பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க. அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன். எல்லா கோளிலும் ஏற்றப்படுவேன். இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர். தமிழ் 

5.விடை வரிசையை தேர்க.

இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும். இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.

சித்தாரா, நேவிக்

குறுவினா

1.கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக

கூட்டுபுழு தான் பட்டுப் பூச்சியாய் கோலம் கொள்ளும் மறவாதீர்! காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர்!

2.இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக 

  1. தானியங்கிப் பண இயந்திரம்
  2. அட்டை தேய்ப்பி இயந்திரம் 
  3. தமிழக அரசின் நியாயவிலைக் கடை- திறனட்டை கருவி 
  4. ஆளறி சோதனைக் கருவி
  5. அருகலை அச்சுப்பொறி இயந்திரம் 

3.மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே. இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும் மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

  1. மூவறிவு-கரையான், எறும்பு 
  2. நான்கறிவு-நண்டு, தும்பி
  3. ஐந்தறிவு -பறவை, விலங்கு

4.செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது?

இது செயற்கைக்கோள் ஏவுஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும். அதைப் பயன்படுத்தி வாகனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.

சிறுவினா

1.‘என் சமகாலத் தோழர்களே‘ கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

  1. அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள். 
  2. கரிகாலன் தன் பெருமை எல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள். 
  3. ஏதும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள். 
  4. ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

2.அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?

  1. ஓரறிவு -புல், மரம் 
  2. ஈரறிவு- சிப்பி, நத்தை 
  3. மூவறிவு- கரையான், எறும்பு 
  4. நான்கறிவு- நண்டு, தும்பி 
  5. ஐந்தறிவு -பறவை, விலங்கு 
  6. ஆறறிவு- மனிதன்

3.பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.

  1. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேசிய திறனறித் தேர்வு, 
  2. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி மற்றும் கல்வி உதவித்தொகைத் தேர்வு, 
  3. கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத் திறனறித் தேர்வு ஆகியவை நடத்தப்படுகின்றன. 
  4. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.

4.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக் கோளின் பங்கு யாது?

  1. இப்போது நாம் திறன் பேசிகளைப் பயன்படுத்துகிறோம். தானியக்க பண இயந்திரம், அட்டை பயன்படுத்தும் இயந்திரம் இதற்கெல்லாம் செயற்கைக்கோள் பயன்படுகிறது. 
  2. மக்கள் பயன்படுத்தும் இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் அவசியம் தேவை. 
  3. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குச் செயற்கைக் கோள்கள் பயன்படுகின்றன.

5.வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

தோப்புக்கள்- தோப்புகள்.

கத்தி கொண்டு வந்தான்- கத்திக் கொண்டு வந்தான். 

  1. மேற்கண்ட சொற்களில் வல்லினம் மிகும் போது ஒரு பொருளும் மிகாத போது வேறொரு பொருளும் வருவதை அறியலாம். 
  2. நாம் பேசும்போதும் எழுதும் போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.

நெடுவினா

1.அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.

ஆளறிச் சோதனைக் கருவி

  1. ஆளறிச் சோதனைக் கருவி மனிதனின் கைரேகை, முகம், விழித்திரை ஆகியவற்றில் ஒன்றையோ அனைத்தையுமோ அடையாளமாக பதிவு செய்யவும் பதிவு செய்த அடையாளம் மூலம் மறுபடி ஆளை அறியவும் பயன்படுகிறது. 
  2. நடுவண் அரசின் ஆதார் அடையாள அட்டையைப் பெறுவதற்கு நம்முடைய ஒளிபாபடத்தையும் விழித்திரையையும் இரு கைகளின் பத்து விரல் ரேகைகளையும் பதிவு செய்கிறோம். 
  3. அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வருகைப்பதிவுக்காகவும் வெளியேறுகைப் பதிவிற்காகவும் இக்கருவி பயன்படுகிறது.

இணைய வணிகம் 

  1. இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979 இல் இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார். 
  2. இது இணைய உலகின் மற்றொரு பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. 
  3. 1989இல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக் கடை தொடங்கப்பட்டது. 
  4. 1991ல் இணையம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. 
  5. இன்று இணைய நிறுவனங்கள் விற்காத பொருள்கள் எதுவும் உலகில் இல்லை. 
  6. கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில் விற்கப்படுகின்றன. 
  7. இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது

2.இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க.

இந்திய விண்வெளித் துறை

  1. 1983 ஆம் ஆண்டு முதல் முதலில் பிஎஸ்எல்வி திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் இசைவு தந்தது 
  2. ஒரு செயற்கைக்கோள் ஏவுதளத்தில் என்ன மாதிரி மென்பொருள் பயன்படுத்த வேண்டும், வாகனத்தின் வடிவம் எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு உயரம், எவ்வளவு அகலம், எந்தப் பாதையில் போக வேண்டும் ஆகியவற்றை முடிவு செய்யக்கூடிய செயலி ‘சித்தாரா’ எனப்படுகிறது.
  3. ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் மூலம் எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதைக் கணிப்பதற்கு செயற்கைக் கோள்கள் உதவுகின்றன
  4. நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைச் செயற்கைக் கோள்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன
  5. கடல் பகுதியில் எந்த எந்த இடங்களில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்று மீனவர்களுக்குச் சொல்ல முடிகிறது
  6. மக்கள் பயன்படுத்தும் இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் தேவை. 
  7. குறைந்த செலவில் மக்களுக்குத் தரமான சேவைகளைக் கொடுப்பதுதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
  8. இதுவரை இந்தியாவுக்காக 45 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. 
  9. நேவிக் என்ற செயலி மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. 
  10. விண்வெளித் துறையில் செயற்கைக்கோளை ஏவுவதற்கான தொழில்நுட்பம், செயற்கைக்கோளை ஏற்றிச்செல்லும் ஏவு ஊர்தி, அந்த ஏவு ஊர்தியிலிருந்து விடுபட்ட செயற்கைக்கோள் தரும் செய்திகளைப் பெற்று அதைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் ஆகிய மூன்று வகையான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.
  11. இந்தியா மறு பயன்பாட்டிற்கு ஏற்ற ஏவு ஊர்திகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது 
  12. ஜி எஸ் எல் வி மார்க் 2 ஏவுகணை 3 டன்கள் சுமக்கும். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை 6 டன்கள் வரை சுமக்கும் 
  13. சந்திராயன் 2 நிலவில் இறங்கி ஆராய்ந்தது. 
  14. 2013இல் மங்கள்யான் திட்டம் உருவானது. 
  15. மூன்று ஆண்டுகள், 7 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என இஸ்ரோவில் மூன்று வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்.

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க 

Bottle xylophone: music music with bottles 

You will need :6 glass bottles, wooden spoon, water, food colouring

Fill one bottle with water, then fill each other bottle with slightly less than the bottle next to it. 

Add some food colouring to help you to see the different levels of water 

Tap the bottles with the end of a wooden spoon. Can you play a tune?

Water music 

Hitting the bottles with the spoon Makes them vibrate and produce a sound. The more the bottle vibrates, higher the note will be. The more water in a bottle, the less it vibrates, so less water means higher notes.


குடுவை இசைக்கருவி: 

குடுவை இசையை உருவாக்குவோம்.

தேவையானவை: 6 கண்ணாடிக் குடுவைகள், மரத்தாலான சிறுகரண்டி ஒன்று, சில உணவு நிறமூட்டிகள்

முதல் குடுவையை முழுவதுமாக நீரால் நிரப்பவும். அடுத்தடுத்த குடுவைகளில் நீரின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ளவும்.

நீரின் வெவ்வேறு மட்டங்களை அறிந்து கொள்வதற்காக அவற்றில் உணவு நிறமூட்டிகளைச் சேர்க்கவும்.

மரத்தாலான சிறுகரண்டியின் மறுமுனையால் குடுவைகளைத் தட்டவும். இசையை உருவாக்க முடிகிறதா?

நீர் இசை

மரத் தேக்கரண்டியால் குடுவைகளைத் தட்டும் போது அவை அதிர்ந்து ஓசையை எழுப்புகின்றன. அதிகமாக அதிரும் குடுவை அதிக ஓசையை எழுப்புகிறது. அதிக நீர் உள்ள குடுவை குறைவாக அதிர்ந்து குறைந்த ஓசையையும் குறைந்த நீர் உள்ள குடுவை அதிகமாக அதிர்ந்து அதிக ஓசையையும் எழுப்புகிறது. 

பின்வரும் பத்தியில் இடம் பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக 

  1. ரொம்ப வீக்கு -வலிமை குறைந்தது
  2. ஆதார ருசிகள் -முதன்மையான சுவைகள்
  3. காபி-குளம்பி
  4. ஸேவரி டெஸ்ட்-காரச் சுவை 
  5. சராசரி -ஏறத்தாழ
  6. அலட்டல்- மலைப்பு
  7. எக்ஸ்பிரஷன் -உணர்ச்சி வெளிப்பாடு
  8. வாசனை-நறுமணம்
  9. அல்வா -தேங்கூழ், இனிப்புக்களி
  10. ஐஸ்கிரீம் -பனிக்கூழ்
  11. ரசி-கண்டுகளி
  12. ஜில்-குளிர்ச்சி
  13. பெப்பர்மின்ட் -புதினாச்சுவை
  14. மஸ்க் அரபு சேக் செண்ட்- ஆண்மானிலிருந்து எடுக்கப்பட்ட வாசனைத்திரவியம் 
  15. பெட்ரோல்-கல்நெய்
  16. அமிலம் -புளிப்பு

கதையைப் படித்து உரையாடலாக மாற்றுக 

சிப்பி 1: ஐயோ, என்னால் வலி தாங்க முடியவில்லையே 

சிப்பி 2: ஏன்? என்னாச்சு? 

சிப்பி 1: எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டைப் பந்து உருள்வது போல் இருக்கிறது ரொம்ப வலி.

சிப்பி 2: ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல் நலமாக இருக்கிறேன்

நண்டு: (இரண்டாவது சிப்பியைப் பார்த்து) உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால் இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி இன்னும் சில நாள்களில் ஒரு அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை தேடித் தரும்


நயம் பாராட்டுக

பரிதி வாழி

திரண்ட கருத்து:

கதிரவன் பொங்குகிறது; பொலிகிறது; பிடரிமயிர் சிலிர்க்கும் சிங்கம் போன்று காட்சியளிக்கிறது; வான வீதியில் திகுதிகுவென நெருப்புப் பிழம்பாக எரிகிறது; மாணிக்கக் குன்றாக, தங்கத்தின் தட்டாக, வானத்தின் விளக்காக ஒளிர்கிறது. கடல், வானம், மலை, காடு, பொய்கை, ஆறு என எல்லா இடங்களிலும் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகிற கதிரவன் வாழ்க.

சொல் நயம்

இப்பாடலில்,”மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த தங்கத்தின் தட்டே!” என்ற அழகான சொற்கள் பயின்று வந்துள்ளன.

சந்த நயம்

இப்பாடலில்,”மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே!” என்ற இடத்தில் சந்த நயம் பயின்று வந்துள்ளது. 

தொடை நயம் 

இப்பாடலில் மோனை, எதுகை, இயைபு ஆகிய நயங்கள் பயின்று வந்துள்ளன.

மோனை

பொங்கியும் 

பொலிந்தும் 

எதுகை

பொங்கியும் 

மங்காத

இயைபு

சிலிர்க்கும்

எரிக்கும் 

அணி நயம் 

இப்பாடலில் உயர்வு நவிற்சிஅணி பயின்று வந்துள்ளது

மொழியோடு விளையாடு

அகராதியில் காண்க 

  1. இமிழ்தல் 
  2. இசைவு
  3. துவனம் 
  4. சபலை
  5. துகலம் 

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக 

1.எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன் இடத்தை விட்டு அகல் 

2.எனக்கு கால்பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழ ஈரம்; பார்த்து உன் காலை வை.

3.கைக் பொருளைக் கடல் அலையில் தொலைத்து விட்டுக் கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?

4.வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும். வெளியில் அதனை கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.

5.எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக. 

1.மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.

2.பாதையில் குவிந்து கிடந்த மணலை அள்ளி ஓரமாகக் குவித்து வைத்தான் 

3.பிரிந்திருந்த நண்பர்களை நாம் ஒன்று சேர்ந்து சேர்த்து வைப்போம்.

4.பணிந்து நடவாத பணியாளரை, “உள்ளே வராதே” என அலுவலர் பணித்தார்

5.பொருந்தும் இடங்களை கண்டு பொருத்துக

6.மாறுதல் வேண்டியவர்களை உடனடியாக மாற்றுப் பணியில் அமர்த்துக. 

கலைச்சொல் தருக 

  1. launch vehicle ஏவு ஊர்தி
  2. missile ஏவுகணை
  3. nautical mile கடல் மைல்
  4. video conference காணொளிக் கூட்டம்
  5. download பதிவிறக்கம்
  6. passenger name record பயணியர் பெயர்ப் பதிவு
  7. electronic devices மின்னணுக் கருவிகள் 

கற்பவை கற்றபின்

வல்லினம் வருமா? 

1.தோழி கூற்று -நிலைமொழி உயர்திணையாய் வரின் வல்லினம் மிகாது

2.பெரிய தம்பி -குறிப்பு பெயரெச்சத்தின்பின் வல்லினம் மிகாது

3.சிறிய பறவை -குறிப்பு பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது

4.பழகு தமிழ் -வினைத்தொகையில் வல்லினம் மிகாது

5.இது கேள் -அது இது எது எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது

6.எலி கடிக்கும் -எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

7.ஓடிய குதிரை -பெயரெச்சத் தொடரில் வல்லினம் மிகாது

8.தரும்படி சொன்னார் -படி என்று முடியும் வினையெச்சத்தின்பின் வல்லினம் மிகாது

9.வாழ்க தலைவர் -வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது

10.கார்காலம்-ஆறாம் வேற்றுமை தொகையில் வல்லினம் மிகாது. 

வல்லினம் இடலாமா? 

1.வாழ்த்துகள் -கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது

2.எழுத்துகள்- கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது

3.திருநிறை செல்வன் -வினைத்தொகையில் வல்லினம் மிகாது

4.திருவளர் செல்வி-வினைத்தொகையில் வல்லினம் மிகாது. 

எது சரி? எது தவறு? காரணம் கூறு.

1.அண்ணாமலை பல்கலைக்கழகம் -நிலைமொழி உயர்திணையாய் வரின் வல்லினம் மிகாது.

2.அத்தனை சிறிய -அத்தனை இத்தனை எத்தனை என்ற சொற்களின் வல்லினம் மிகாது.

3.ஆத்திசூடி -இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

4.எடுத்துக்காட்டுகள் -வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்

5.கீழ்ப்பக்கம் -ய் ர் ழ் ஈற்று எழுத்துக்களின் பின் வல்லினம் மிகும்

6.சான்றோர் பேரவை -சான்றோரை உடைய பேரவை-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகாது

7.சென்னைப் பல்கலைக்கழகம் -சென்னையில் உள்ள பல்கலைக்கழகம்-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

8.தயிர்ச்சோறு-தயிரை உடைய சோறு-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

கீழ்காணும் தொடர்களில் வல்லினம் மிகும் மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக

1.வங்கிக்கடன் -வங்கியில் வழங்கப்படும் கடன்-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

2.திட்டக்குழு -திட்டத்தை உருவாக்கும் குழு-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

3.பழங்களைப் பறிக்காதீர் -இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

4.அரசு ஆணை பிறப்பித்தது -இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

5.மருந்துக் கடை -சில மென்தொடர்க் குற்றியலுகரங்களின பின் வல்லினம் மிகும்

6.வேலையில்லாப் பட்டதாரி -ஈறுகட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

7.சிறப்புப் பரிசு-வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.