ஒன்பதாம் வகுப்பு இயல் 3
பலவுள் தெரிக
1.பொருந்தாத இணை எது? திருவாரூர்- கரிக்கையூர்
2.முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக. தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல்
3.பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்- எட்டு பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
4.ஐம்பெருங்குழு, எண்பேராயம்- சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம். தொகைச்சொற்கள்
5.சொற்றொடர்களை முறைப்படுத்துக. ஆ, அ, இ
குறுவினா
1.நீங்கள் வாழும் பகுதியில் ஏறு தழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
- மாடு பிடித்தல்
- மாடு விடுதல்
2.தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?
பழந்தமிழரின் வாழ்க்கை முறையை
- புரிந்து கொள்ள
- அதன்படி வாழ
அகழாய்வு செய்ய வேண்டும்
3.ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக
- ஏறுகோள்
- எருதுகட்டி
4.பழமணல் மாற்றுமின்; புது மணல் பரப்புமின்- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் :மணிமேகலை விழாவறை காதை
பொருள்: தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்
5.பட்டிமண்டபம், பட்டிமன்றம்- இரண்டும் ஒன்றா? விளக்கம் தருக.
- பட்டிமண்டபம் என்பது இலக்கிய வழக்கு.
- பட்டிமன்றம் என்பது பேச்சு வழக்கு.
6.ஏறு தழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.
- சேலம்
- கரிக்கையூர்
- கல்லூத்து மேட்டுப்பட்டி
- சித்திரக்கல் புடவு
சிறுவினா
1.வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளுக்குப் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
2.ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
- முல்லை- மேய்ச்சல்
- மருதம்- உழவு
- பாலை- போக்குவரத்து
3.வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துக்களைத் தொகுத்துரைக்க.
- முன்னோர்கள் பெற்ற அறிவை அறிய,
- இன்றைய தலைமுறை எடுத்துக் கொண்டு சிறப்பாக வாழ
அகழாய்வு தேவை
4.உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
இந்திர விழாவைப் போலவே எங்கள் ஊரிலும்
- தோரணங்கள் கட்டி.
- பந்தலைக் கட்டி
- வாழையை நட்டு
- தோரணம் தொங்க விடுவோம்
நெடுவினா
1.ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
ஏறுதழுவுதலும் தமிழர் அறமும்
- ஸ்பெயின் நாட்டில் காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான்.
- அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
- ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை கொல்லப்படுவதும் உண்டு.
- இது மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.
- தமிழகத்தில் நடைபெறும் ஏறுதழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக்கூடாது.
- காளைகளுக்கு வழிபாடு செய்வர்.
- காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
- அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் விளையாட்டு இது.
- காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவார்.
2.பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
பண்பாட்டுக் கூறுகளைப் பேணுவோம் !
முன்னுரை:
“தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்கிறார் நாமக்கல் கவிஞர்.
நாம் செய்ய வேண்டிய செயல்கள்:
- தமிழர்தம் கவின்கலைகளை ஆதரித்துப் போற்ற வேண்டும்.
- விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைக்க வேண்டும்.
- புதிய கலைஞர்களை ஊக்குவித்தல் வேண்டும்
- திருவிழாக்களில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீரவிளையாட்டுகள் நடத்தப்பட வேண்டும்.
முடிவுரை:
யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பண்பாடு கொண்டவர்கள் நாம். அத்தகைய பண்பாட்டை நம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.
பொன்மொழிகளை மொழிபெயர்க்க
1.Nation’s culture resides in the hearts and in the soul of its people
ஒரு நாட்டின் பண்பாடு அங்கு வாழும் மக்களின் இதயங்களிலும் உயிரிலும் கலந்துள்ளது.
2.The art of people is a true to mirror to their minds
கலை, மக்களின் மனத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி
3.The biggest problem is the lack of love and charity
அன்பும் தொண்டும் குறைந்து வருவது ஆபத்தானது.
4.You have to dream before your dreams can come true
உன்னுடைய கனவு நனவாகும்வரை கனவு காணுங்கள்
5.Winners don't do different things they do things differently
வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாகச் செய்வார்கள்.
மரபு இணைச் சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.
1.மேடும் பள்ளமும்- வாழ்க்கை மேடும் பள்ளமும் நிறைந்தது
2.நகமும் சதையும்-நானும் என்நண்பனும் நகமும் சதையும் போல சேர்ந்தே இருப்போம்.
3.முதலும் முடிவும்-கட்டுரையில் முதலும் முடிவும் சிறப்பாக அமைய வேண்டும்
4.கேளிக்கையும் வேடிக்கையும்-எங்கள் ஊர்த்திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்தது
5.கண்ணும் கருத்தும்-நான் படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தேன்
6.மேலும் கீழும்-சிட்டுக்குருவி மேலும் கீழுமாகப் பறக்கிறது
உங்கள் பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக
தொகுப்புரை
இலக்கியமன்ற விழா
எங்கள் பள்ளியில் கல்விவளர்ச்சிநாளை முன்னிட்டு இலக்கியமன்ற விழா 15-07-2024 அன்று காலை 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. தமிழாசிரியர் அனைவரையும் “வருக வருக” என வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். தாவரவியல் ஆசிரியர் கல்வியின் சிறப்புகள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவ மாணவிகள் காமராசரை பற்றிப் பேசினார்கள். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விலங்கியல் ஆசிரியர் நன்றி கூறினார். நாட்டுபண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது
மொழியோடு விளையாடுக
பொருள் எழுதித் தொடரமைக்க
1.கரை-கடற்கரை-கடற்கரையில் மக்கள் கூடிமகிழ்ந்தனர்.
2.கறை-அழுக்கு-ஆடையில் கறை படிந்திருந்தது
3.குளவி- தேனீ வகை- என் வீட்டில் தேன்குளவி கூடுகட்டியது
4.குழவி-குழந்தை-குழவி பசியால் அழுதது
5.வாளை-வாளை மீன்- குளத்தில் வாளை மீன் துள்ளி விழுந்தது.
6.வாழை- வாழைமரம்- வாழைப்பழம் இனிக்கும்.
7.பரவை- கடல்- பரவை மீது பறவைகள் பறந்தன.
8.பறவை- பறக்கும் உயிரினங்கள்- பறவை பறந்தது.
9.மரை- மான்- மான் துள்ளி ஓடியது
10.மறை- ஒளிந்து இரு- அறியாமை மறைந்துவிட்டது.
11.அலை-கடலலை-கடலில் அலை அதிகமாக இருக்கிறது.
12.அழை -கூப்பிடு-நான் அழைத்தேன்
அகராதியில் காண்க
இயவை -வழி
சந்தப்பேழை-சந்தன பெட்டி
சிட்டம்- ஞானம்
தகழ்வு- ஆடம்பரம்
பௌரி- பண்வகை
நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள்
- கீழே விழுந்த நண்பனைத் தூக்கி விட்ட போது
- வாசிக்கத் தெரியாத நண்பனுக்கு வாசிக்கக் கற்றுத் தந்தபோது
- வயதான பாட்டிக்கு உதவி செய்தபோது
- பார்வையற்றவர்க்கு உதவி செய்தபோது
- வீட்டு வேலைகளைப் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டபோது
திருக்குறள்
குறுவினா
1.நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?
தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது.
2.தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.
தீயவை தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்சவேண்டும்.
3.ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக
மோனை
ஒற்றொற்றித்
ஒற்றினால்
எதுகை
ஒற்றொற்றித்
ஒற்றினால்
4.கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
செயல் வேறு சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.
கலைச்சொல் தருக
- Excavation -அகழாய்வு
- Epigraphy -கல்வெட்டியல்
- Hero stone -நடுகல்
- Cultural symbol -பண்பாட்டுக் குறியீடு
- Embossed sculpture -புடைப்புச் சிற்பம்
- Inscription-பொறிப்பு
இயல் 4
பலவுள் தெரிக
1.கீழ்காணும் மூன்று தொடர்களுள்
அ.)இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய இந்திய நிறுவனம் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்
ஆ.)வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
இ.)திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.
அ,இ ஆகியன சரி; ஆ தவறு
2.தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வு தேர்வு எது? ஊரகத் திறனறிவுத்தேர்வு
3.ஒன்றறிவதுவே உற்று அறிவதுவே இரண்டு அறிவதுவே அதனொடு நாவே. இவ்வடிகளில் அதனொடு என்பதை எதைக் குறிக்கிறது? தொடு உணர்வு
4.பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க. அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன். எல்லா கோளிலும் ஏற்றப்படுவேன். இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர். தமிழ்
5.விடை வரிசையை தேர்க.
இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும். இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.
சித்தாரா, நேவிக்
குறுவினா
1.கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக
கூட்டுபுழு தான் பட்டுப் பூச்சியாய் கோலம் கொள்ளும் மறவாதீர்! காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர்!
2.இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக
- தானியங்கிப் பண இயந்திரம்
- அட்டை தேய்ப்பி இயந்திரம்
- தமிழக அரசின் நியாயவிலைக் கடை- திறனட்டை கருவி
- ஆளறி சோதனைக் கருவி
- அருகலை அச்சுப்பொறி இயந்திரம்
3.மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே. இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும் மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
- மூவறிவு-கரையான், எறும்பு
- நான்கறிவு-நண்டு, தும்பி
- ஐந்தறிவு -பறவை, விலங்கு
4.செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது?
வாகனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.
சிறுவினா
1.‘என் சமகாலத் தோழர்களே‘ கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்.
கரிகாலன் தன் பெருமை எல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள்.
ஏதும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்.
ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
2.அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?
- ஓரறிவு -புல், மரம்
- ஈரறிவு- சிப்பி, நத்தை
- மூவறிவு- கரையான், எறும்பு
- நான்கறிவு- நண்டு, தும்பி
- ஐந்தறிவு -பறவை, விலங்கு
- ஆறறிவு- மனிதன்
3.பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.
- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேசிய திறனறித் தேர்வு,
- எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி மற்றும் கல்வி உதவித்தொகைத் தேர்வு,
- கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத் திறனறித் தேர்வு ஆகியவை நடத்தப்படுகின்றன.
- அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.
4.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக் கோளின் பங்கு யாது?
இப்போது நாம் திறன் பேசிகளைப் பயன்படுத்துகிறோம். தானியக்க பண இயந்திரம், அட்டை பயன்படுத்தும் இயந்திரம் இதற்கெல்லாம் செயற்கைக்கோள் பயன்படுகிறது.
மக்கள் பயன்படுத்தும் இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் அவசியம் தேவை.
நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குச் செயற்கைக் கோள்கள் பயன்படுகின்றன.
5.வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
தோப்புக்கள்- தோப்புகள்.
கத்தி கொண்டு வந்தான்- கத்திக் கொண்டு வந்தான்.
மேற்கண்ட சொற்களில் வல்லினம் மிகும் போது ஒரு பொருளும் மிகாத போது வேறொரு பொருளும் வருவதை அறியலாம்.
நாம் பேசும்போதும் எழுதும் போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.
நெடுவினா
1.அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.
ஆளறிச் சோதனைக் கருவி
ஆளறிச் சோதனைக் கருவி மனிதனின் கைரேகை, முகம், விழித்திரை ஆகியவற்றில் ஒன்றையோ அனைத்தையுமோ அடையாளமாக பதிவு செய்யவும் பதிவு செய்த அடையாளம் மூலம் மறுபடி ஆளை அறியவும் பயன்படுகிறது.
நடுவண் அரசின் ஆதார் அடையாள அட்டையைப் பெறுவதற்கு நம்முடைய ஒளிப்படத்தையும் விழித்திரையையும் இரு கைகளின் பத்து விரல் ரேகைகளையும் பதிவு செய்கிறோம்.
அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வருகைப்பதிவுக்காகவும் வெளியேறுகைப் பதிவிற்காகவும் இக்கருவி பயன்படுகிறது.
இணைய வணிகம்
இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979 இல் இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்.
இது இணைய உலகின் மற்றொரு பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.
1989இல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக் கடை தொடங்கப்பட்டது.
1991ல் இணையம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
இன்று இணைய நிறுவனங்கள் விற்காத பொருள்கள் எதுவும் உலகில் இல்லை.
கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில் விற்கப்படுகின்றன.
இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது
2.இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க.
இந்திய விண்வெளித் துறை
- 1983 ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி திட்டம் ஆரம்பம்
- சித்தாரா செயலி பயன்படுத்தப் படுகிறது.
- விளைச்சலை கணிக்க
- நீரின் அளவைக் கணக்கிட
- மீன் வளத்தை கணக்கிட
- மக்கள் பயன்படுத்தும் இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் தேவை.
- குறைந்த செலவில் மக்களுக்குத் தரமான சேவை
- இதுவரை இந்தியாவுக்காக 45 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
- நேவிக் மீனவர்களுக்காக
- இந்தியா மறு பயன்பாட்டிற்கு ஏற்ற ஏவு ஊர்திகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது
- ஜி எஸ் எல் வி மார்க் 2 ஏவுகணை 3 டன்கள் சுமக்கும். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை 6 டன்கள் வரை சுமக்கும்
- சந்திராயன் 2 நிலவில் இறங்கி ஆராய்ந்தது.
- 2013இல் மங்கள்யான் திட்டம் உருவானது.
- மூன்று ஆண்டுகள், 7 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என இஸ்ரோவில் மூன்று வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்.
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்க்க
Bottle xylophone: music music with bottles
You will need :6 glass bottles, wooden spoon, water, food colouring
Fill one bottle with water, then fill each other bottle with slightly less than the bottle next to it.
Add some food colouring to help you to see the different levels of water
Tap the bottles with the end of a wooden spoon. Can you play a tune?
Water music
Hitting the bottles with the spoon Makes them vibrate and produce a sound. The more the bottle vibrates, higher the note will be. The more water in a bottle, the less it vibrates, so less water means higher notes.
குடுவை இசைக்கருவி:
குடுவை இசையை உருவாக்குவோம்.
தேவையானவை: 6 கண்ணாடிக் குடுவைகள், மரத்தாலான சிறுகரண்டி ஒன்று, சில உணவு நிறமூட்டிகள்
முதல் குடுவையை முழுவதுமாக நீரால் நிரப்பவும். அடுத்தடுத்த குடுவைகளில் நீரின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ளவும்.
நீரின் வெவ்வேறு மட்டங்களை அறிந்து கொள்வதற்காக அவற்றில் உணவு நிறமூட்டிகளைச் சேர்க்கவும்.
மரத்தாலான சிறுகரண்டியின் மறுமுனையால் குடுவைகளைத் தட்டவும். இசையை உருவாக்க முடிகிறதா?
நீர் இசை
மரத் தேக்கரண்டியால் குடுவைகளைத் தட்டும் போது அவை அதிர்ந்து ஓசையை எழுப்புகின்றன. அதிகமாக அதிரும் குடுவை அதிக ஓசையை எழுப்புகிறது. அதிக நீர் உள்ள குடுவை குறைவாக அதிர்ந்து குறைந்த ஓசையையும் குறைந்த நீர் உள்ள குடுவை அதிகமாக அதிர்ந்து அதிக ஓசையையும் எழுப்புகிறது.
நயம் பாராட்டுக
பரிதி வாழி
திரண்ட கருத்து:
கதிரவன் பொங்குகிறது; பொலிகிறது; பிடரிமயிர் சிலிர்க்கும் சிங்கம் போன்று காட்சியளிக்கிறது; வான வீதியில் திகுதிகுவென நெருப்புப் பிழம்பாக எரிகிறது; மாணிக்கக் குன்றாக, தங்கத்தின் தட்டாக, வானத்தின் விளக்காக ஒளிர்கிறது. கடல், வானம், மலை, காடு, பொய்கை, ஆறு என எல்லா இடங்களிலும் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகிற கதிரவன் வாழ்க.
சொல் நயம்
இப்பாடலில்,”மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த தங்கத்தின் தட்டே!” என்ற அழகான சொற்கள் பயின்று வந்துள்ளன.
சந்த நயம்
இப்பாடலில்,”மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே!” என்ற இடத்தில் சந்த நயம் பயின்று வந்துள்ளது.
தொடை நயம்
இப்பாடலில் மோனை, எதுகை, இயைபு ஆகிய நயங்கள் பயின்று வந்துள்ளன.
மோனை
பொங்கியும்
பொலிந்தும்
எதுகை
பொங்கியும்
மங்காத
இயைபு
சிலிர்க்கும்
எரிக்கும்
அணி நயம்
இப்பாடலில் உயர்வு நவிற்சிஅணி பயின்று வந்துள்ளது
மொழியோடு விளையாடு
அகராதியில் காண்க
1. இமிழ்தல் -ஒலித்தல்
2. இசைவு-இணக்கம்
3. துவனம் -நெருப்பு
4. சபலை-மின்னல்
5. துகலம் -நுட்பமான ஒலி
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக
1.எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன் இடத்தை விட்டு அகல்
2.எனக்கு கால்பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழ ஈரம்; பார்த்து உன் காலை வை.
3.கைக் பொருளைக் கடல் அலையில் தொலைத்து விட்டுக் கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
4.வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும். வெளியில் அதனை கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
5.எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக.
1.மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
2.பாதையில் குவிந்து கிடந்த மணலை அள்ளி ஓரமாகக் குவித்து வைத்தான்
3.பிரிந்திருந்த நண்பர்களை நாம் ஒன்று சேர்ந்து சேர்த்து வைப்போம்.
4.பணிந்து நடவாத பணியாளரை, “உள்ளே வராதே” என அலுவலர் பணித்தார்
5.பொருந்தும் இடங்களை கண்டு பொருத்துக.
6.மாறுதல் வேண்டியவர்களை உடனடியாக மாற்றுப் பணியில் அமர்த்துக.
கலைச்சொல் தருக
- launch vehicle ஏவு ஊர்தி
- missile ஏவுகணை
- nautical mile கடல் மைல்
- video conference காணொளிக் கூட்டம்
- download பதிவிறக்கம்
- passenger name record பயணியர் பெயர்ப் பதிவு
- electronic devices மின்னணுக் கருவிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக