- சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
- எறிதிரை- எறுதிரான்
- கலன் -கலயுகோய்
- நீர் -நீரியோஸ், நீரிய
- நாவாய் -நாயு
- தோணி- தோணிஸ்
- திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
- தென் திராவிட மொழிகள்
- நடுத்திராவிட மொழிகள்
- வட திராவிட மொழிகள்
திராவிட மொழிகளில் எனக்குத் தெரிந்த மொழி தமிழ்.
தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்:
- தொன்மை
- இளமை
- சீர்மை
- வளமை
- தனித்தன்மை
3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
- மலையாளம் -மூணு
- தெலுங்கு -மூடு
- கன்னடம் -மூரு
- துளு- மூஜி
4. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
- காலம் பிறக்கும் முன் பிறந்த தமிழ் 'அகம்' என்றும், 'புறம்' என்றும் அமைந்தது.
- பின்னர், அவற்றுக்கு இலக்கணங்கள் பிறந்தன.
- அதன் பின்னர் காப்பிய இலக்கியங்களாக மலர்ந்தது
- நீதி நூல்களாக ஒளி வீசியது.
- சமய இலக்கியங்களாகக் கிளைத்தது
- சித்தர் பாடல்களாகச் சிலிர்த்தது
- தற்போது தொழில்நுட்பத்தை ஏற்று கணினித் தமிழாய்த் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது
5. வளரும் செல்வம் உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக
- பாய்யியோனா-பா
- சாப்போ -வெண்பா
- இளிகியா- இளிவரல்
- எறிதிரேசியன் ஆஃப் தெ பெரிபுலஸ்- கடலைச் சார்ந்த பெரிய புலம்
6. தன்வினை, பிறவினை எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்திக் காட்டுக.
- அம்மா உண்டாள். எழுவாய் ஒரு வினையைச் செய்தால், அது தன்வினை எனப்படும்.
- அம்மா உண்பித்தாள். எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால், அது பிறவினை எனப்படும்.
7. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய். உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
- தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்று புதுக்கவிதை, நாடகம், புதினம் என்று இலக்கியங்கள் படைப்பேன்.
- பிற மொழிச் செல்வங்களைத் தமிழிலும், தமிழ்ச் செல்வங்களைப் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பேன்.
இயல் 2
- அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை. அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
- அறிவியல் அணுகுமுறையில் மழைநீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
- நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்
- குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்
- நிலைத்த புகழைப் பெறுவதற்கு குடபுலவியனார் கூறும் வழிகளை எழுதுக.
- நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும்
- அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.
- சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்பட்டது?
- குமிழித்தூம்பைத் தூக்கினால் அடியில் இரண்டு துளைகள் இருக்கும்.
- மேலே இருக்கும் நீரோடித் துளையில் இருந்து நீர் வெளியேறும்.
- கீழே இருக்கும் சேறோடித் துளையிலிருந்து நீர் சுழற்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.
- பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?
- பட்ட மரம், தான் வெட்டப்படும் நாளை எண்ணிக் கவலை அடைந்தது
- இலைகள் கருகியதை எண்ணி வருந்தியது
- பட்டை கிழிந்து, 'கட்டை' என்னும் பெயர் ஏற்பட்டதை எண்ணிக் கலங்கியது.
- வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
- ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய கால்நடைகளைச் சிறப்பிக்கும் வகையில் 'மாட்டுப்பொங்கல்' என்னும் பண்பாட்டுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
- வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பின்னிப்பிணைந்த மாடுகளுடன் விளையாடி மகிழும் மரபே 'ஏறுதழுவுதல்' எனும் பண்பாடாக நீட்சி அடைந்துள்ளது.
- வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த கருத்துக்களைத் தொகுத்துரைக்க.
- கடந்த காலப் பண்பாட்டைப் புரிந்து கொண்டால்தான் எதிர்காலத்தைக் கணிக்க முடியும்
- நம் முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை வகைப்படுத்தித் தொகுத்துப் பார்ப்பதற்கு அகழாய்வு தேவையாகிறது.
- அகழாய்வு தரும் சான்றுகள் மூலம் வளமான வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டு வலிமையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
- உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
- எங்கள் ஊர் விழா முன்னேற்பாடுகள்:
- ஊர்ப் பொதுமக்கள் கூடி விழா குறித்து முடிவு செய்வார்கள்.
- தோரணங்கள், பந்தல்கள், ஒலிபெருக்கிகள் அமைப்பார்கள்.
- ஊர்ப் பெரியவர்களை முன்னிலைப்படுத்துவார்கள்.
- இந்திர விழா நிகழ்வுகள்:
- இந்திர விழாவைக் காண பலரும் வந்திருந்தனர்
- பழைய மணலை மாற்றி புதுமணலைப் பரப்பினர்
- பட்டிமன்ற நிகழ்ச்சிகள் அரங்கேறின.
- ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்து இருந்தது?
- ஏறுதழுவுதல் முல்லை நிலத்தில் தோன்றியது
- மருதநில வேளாண் உற்பத்தியோடு நீட்சி அடைந்தது.
- பாலை நிலப் போக்குவரத்துத் தொழிலோடு பிணைந்தது.
- 'என் சமகாலத் தோழர்களே' கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
- இளைஞர்கள் சமுதாய ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய வேண்டும்
- தோல்வியுற்ற துறைகளில் எல்லாம் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும்
- பெரியோர் சொற்களைக் கேட்டால் மட்டும் போதாது; அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும்
- அடக்கமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்
- உணர்ச்சிவயப்படாமல் அறிவைப் பயன்படுத்த வேண்டும்
- அறிவியலைத் தமிழால் ஆள வேண்டும்
- தமிழனின் பெருமைகளைக் கணினியில் புகுத்த வேண்டும்
- அறியாமையை அகற்றி, தமிழை எல்லாக் கோளிலும் நாட்ட வேண்டும்.
- அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?
- தொடு உணர்வு மட்டும் உள்ள உயிர்கள் ஓர் அறிவு கொண்டவை
- தொடு உணர்வுடன் சுவை உணர்வு கொண்டவை ஈரறிவு உயிர்கள்
- தொடுதல், சுவைத்தலுடன் நுகர்தல் கொண்டவை மூவறிவு உயிர்கள்
- தொடுதல், சுவைத்தல், நுகர்தலுடன் காணல் கொண்டவை நாலறிவு உயிர்கள்
- தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணலுடன் கேட்கும் உணர்வு கொண்டவை ஐந்தறிவு உயிர்கள்
- தொடுதல், சுவைத்தல், நுகர்தல் கானல், கேட்டலுடன் பகுத்தறிவு கொண்டவை ஆறறிவு உயிர்கள்.
- பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணைய வழிச் சேவைகளை எழுதுக.
- பள்ளிக்கல்வி முடித்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
- பள்ளிக் கட்டணங்களைக் இணைய வழியில் செலுத்தலாம்
- பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை இணைய வழியிலேயே விண்ணப்பித்துப் பெறலாம்
- NTSE, TRUST, NMMS போன்ற தேர்வுகளுக்கு இணைய வழியிலேயே விண்ணப்பிக்கலாம்.
- மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?
- திறன்பேசிகள், தானியக்கப் பண எந்திரம், அட்டை பயன்படுத்தும் எந்திரம் உள்ளிட்ட இணையவழிச் சேவைகள் அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் அவசியம் தேவை
- புவியின் வளங்களை அளவிட்டுச் சொல்வதால், அரசு அதற்கேற்ற திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த முடிகிறது. இதன் மூலம் வாழ்க்கைத் தரம் உயர செயற்கைக்கோள்கள் உதவுகின்றன.
- வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
- வல்லினம் மிக வேண்டிய இடத்தில் இடாமல் விடுவதாலும், வல்லினம் மிகாத இடத்தில் இடுவதாலும் பொருள் மயக்கம் உண்டாகிறது. இதனால் மொழியின் கட்டமைப்புச் சிதைந்து அழகு கெடுகிறது.
- எடுத்துக்காட்டு:
- கத்தி கொண்டு வந்தான்.
- கத்திக் கொண்டு வந்தான்.
- முதல் தொடரில் வல்லினம் மிகவில்லை. இத்தொடர் "ஒருவன் கத்தி என்னும் ஆயுதத்தை எடுத்து வந்தான்" என்னும் பொருளைத் தருகிறது. இரண்டாம் தொடரில் வல்லினம் மிகுந்துள்ளது. இத்தொடர் "ஒருவன் சத்தமாகப் பேசிக் கொண்டு வந்தான்" என்னும் பொருளைத் தருகிறது.
- சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
- ஔவையார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- ஆதிமந்தியார்
- வெண்ணிக்குயத்தியார்
- பொன்முடியார்
- அள்ளூர் நன்முல்லையார்
- நக்கண்ணையார்
- காக்கைப் பாடினியார்
- வெள்ளிவீதியார்
- காவற்பெண்டு
- நப்பசலையார்
- சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்.
- இன்பம் சமைப்பவர் யார்?
- சமையல் செய்பவர்.
- பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
- இல்லை.
- விதைக்காமலேயே முளைக்கும் விதைகள்- இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துக்களை எழுதுக.
- சில மரங்கள் பூப்பதில்லை; ஆனால் காய்ப்பது உண்டு
- சில விதைகளை விதைக்க வேண்டியதில்லை; தானாகவே முளைத்து வளரும் விதைகளும் உண்டு
- அதுபோலப் பிறர் உணர்த்தாமலேயே 'மேதையர் எதையும் தாமே உணர்ந்து கொள்வர்.
- இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.
படிக்க வேண்டும் பெண்ணே- அப்பதான்
பார்முழுதும் போற்றிடும் கண்ணே
சுயமாகச் சிந்திக்கத் துணையாகும் கல்வி
சொந்த காலில் நின்றிடவே உடனுதவும் கல்வி
5. மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
- சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
- தேவதாசி ஒழிப்புச் சட்டம், சொத்துரிமைச் சட்டம், குழந்தைத் திருமணச் சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்
- 1930இல் ஔவை இல்லம் தொடங்கியவர்
- 1952இல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியவர்.
- தனித்தமிழ்ப் பற்று உடையவர்
- தனது பெயரைக் 'கருப்பாயி' என மாற்றிக் கொண்டவர்
- தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல்- தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
- முழு உருவச் சிற்பங்கள் - புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
- உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெரியும்படி முழு உருவத்துடன் அமைக்கப்பட்டவை முழு உருவச் சிற்பங்கள் ஆகும்.
- முன்பகுதி மட்டும் தெரியும் வகையில் கல்லில் செதுக்கப்படும் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள் ஆகும்.
- நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
- ஆடை ஆபரணங்கள் அணிந்த நிலையில் கலை நயத்துடன் காணப்படும்
- விழி ஓட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு போன்றவை மிகமிக நுட்பமான கலைநயத்துடன் காணப்படும்
- இராவண காவியத்தில் இடம்பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.
- தூய ஒழுக்கமுடையோர் பசியால் வாடுவோரைக் கண்டதும், அவர்களின் பசியைப் போக்குவர். அதைப்போல, நெய்தல் நிலத்தவர் கடலில் மூழ்கி பவளங்களையும் முத்துகளையும் கடற்கரையில் மலைபோல் குவித்து வைத்தனர்.
- தும்பியானது பெண்களின் முகத்தைத் தாமரைமலர் என்று எண்ணி அவர்களைப் பின்தொடரும். இக்காட்சி நிலவைப் பின்தொடரும் மேகத்தைப் போல உள்ளது.
- ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.
- ஆடும் இளம்பெண்கள் கைகளில் விளக்கையும் கலசத்தையும் ஏந்தி அழைக்க, புவி அதிர, கண்ணன் நடந்து வருகிறான்
- மங்கல இசைகள் முழங்க, சங்குகள் ஊத, முத்துமாலைகள் தொங்கும் பந்தலின் கீழ் கண்ணன் ஆண்டாளைத் திருமணம் செய்கிறான
- குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
- தீயில் இட்ட சந்தன மரக்குச்சிகள், அகில் இவற்றின் மணம் பரவுகிறது
- மலைநெல் சோற்றின் மணம் பரவுகிறது
- காந்தள் மலரின் மணம் பரவுகிறது.
- இவை எல்லா இடங்களிலும் பரவி, குறிஞ்சி நிலம் முழுவதும் மணக்கிறது.
- கைபிடி, கைப்பிடி -சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.
- கைபிடி-கையால் பிடி-இயல்புப் புணர்ச்சி
- கைப்பிடி -ஒரு கை அளவு- விகாரப் புணர்ச்சி
- குறிப்பு வரைக -டோக்கியோ கேடட்ஸ்
- இந்தியத் தேசிய இராணுவத்திலிருந்து நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான் படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, இம்பீரியல் மிலிட்டரி அகடாமிக்கு அனுப்பப்பட்ட 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவுதான் டோக்கியோ கேடட்ஸ்
- இப்பிரிவு பர்மாக்காடுகள் வழியாகப் பயணம் செய்து, சயான் மரண ரயில் பாதையைக் கடந்து, படகு வழியாக தப்பிச் சென்று, பழைய கப்பல் ஒன்றில் ஏறி, முடிவில் ஜப்பானின் கீயூசுத் தீவை அடைந்தது.
- பனியிலும் மழையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.
- இந்திய இராணுவ வீரர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது
- காலை 5 மணிக்கு எழுந்து மூன்று கல் தூரம் ஓட வேண்டும்
- அப்போது குளிர், சுழியத்திற்குக் கீழ் இருக்கும்
- உதடுகள் வெடித்து வலி தாங்க முடியாது
- பனிப்புகை படர்ந்த மைதானத்தில் ஓடுவார்கள்
- ஐந்து நிமிடம் ஓய்வு. பிறகு சிறப்புப் பயிற்சிகள்
- அதை முடித்துக் கொண்டு அவசரமாய்க் குளித்துக்கொண்டு தயாராகி வர வேண்டும்.
- "மாகால் எடுத்த முந்நீர் போல"-இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
- இடம்: மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியில் இடம்பெற்றுள்ளது.
- விளக்கம்: மதுரை நகர வீதிகளில் பலமொழிகள் பேசுவோர் செல்கின்றனர். அவர்களின் பேச்சொலி, பெருங்காற்று புகுந்த கடல் ஒலி போல இருந்தது.
- தற்குறிப்பேற்றணியை விளக்குக.
- கவிஞர், செய்யுளில் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்றணி ஆகும்
- எ.கா.: "அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்டது என வெரீஇப் புள்ளினம் தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும்"
- சிவந்த ஆம்பல் மலர்களைக் கண்ட நீர்ப்பறவைக்குஞ்சுகள், "தண்ணீர் தீப்பிடித்து விட்டது" எனக் கருதி அஞ்சியதாகக் கவிஞர் தம் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார்
- சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
- சேர நாடு: வயல்களில் ஆம்பல் மலர்கள் மலர்ந்திருக்கும். அதைக் கண்டு, "வெள்ளம் தீப்பிடித்துவிட்டது" என்ற அஞ்சிய குஞ்சுகளை நீர்ப்பறவைகள் அரவணைக்கும்.
- சோழ நாடு: அறுவடை செய்த உழவர்கள், நெற்போரின் மீது ஏறி நின்று காவல் காப்பர். அப்போது 'நாவலோ' என்று அழைப்பர். அது யானை மீது நின்று வீரன் அழைப்பது போன்று இருந்தது.
- பாண்டியநாடு: சங்கு முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்குமரம் சிந்திய பாளை மணிகள் ஆகியவை முத்துக்கள் போலிருந்தன.
- ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?
- உணவு வகைகள்
- அறச்சாலைகள்
- மணிமாடங்கள்
- கம்மியர்
- திருமணங்கள்
- பாதுகாவலர்
- பண்பாகு பெயர், தொழிலாகு பெயர் விளக்குக.
- பண்பாகு பெயர்:
- வெள்ளை அடித்தான். இங்கு 'வெள்ளை' என்னும் பண்புப் பெயர், 'சுண்ணாம்பு' என்னும் பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
- தொழிலாகு பெயர்:
- பொங்கல் உண்டான். இங்குப் 'பொங்கல்' என்னும் தொழிற்பெயர், பொங்குதலால் உண்டான உணவுப் பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
- சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
- தேவையற்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும்
- திருமணம் போன்ற விழாக்களை எளிமையாக நடத்த வேண்டும்
- ஆனால் இன்றைய காலத்தில் வெறும் பகட்டிற்காக நிறையச் செலவு செய்து இல்ல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
- அதில் அதிகமாக உணவுகள் வீணாக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் மாசுபடுத்தப்படுகிறது.
- நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதரகாவியம் குறிப்பிடுவன யாவை?
- நற்செயல் செய்ய வேண்டும்
- சினத்தை நீக்க வேண்டும்
- மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்
- நன்னெறியினைக் கடைபிடிக்க வேண்டும்
- பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் குறிப்பிடுக.
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
- யசோதர காவியம்
- நாககுமார காவியம்
- உதயணக்குமார காவியம்
- பெருங்கதை
- கம்பராமாயணம்
- யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிட்டு எழுதுக.
- ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக-அன்றறிவாம் எண்ணாது அறம் செய்க.
- நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக-மெய்ப்பொருள் காண்பது அறிவு
- போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக-மறத்தல் வெகுளியை யார்மாட்டும் ...
- காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே-செய்தவம் ஈண்டு முயலப்படும்
- உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளாக ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?
- திருக்குறள் போன்ற உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுள்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது
- கோர்டன் ஆல்போர்ட் கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.
- மனிதன் தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்த்தல்
- தன்னை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறுதல்
- தனது வாழ்க்கைக்கு ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து நடத்தல்
- பழங்களை விடவும் நசுங்கிப் போனது- இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
- இடம்: கல்யாண்ஜியின் 'அக்கறை' என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.
- விளக்கம்: தக்காளிக் கூடை சரிந்து உருண்டதைக் கண்டும் காணாமல், தலைக்கு மேலே வேலை இருப்பதாய்க் கூறி, அக்கறையின்றி, அனைவரும் கடந்து போயினர்.
- மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.
மழலை ஒன்று மணலை அள்ளிக்குவியல் இட்டு வைத்ததுகடலும் அதனைப் பார்க்க எண்ணிஅலையை அனுப்பி வைத்ததுஆசையுடன் முத்தமிட்டுஅலை வந்து அள்ளிச் சென்றது
- பெண் யானையின் பசியைப் போக்க ஆண் யானை 'யா' மரத்தின் பட்டையை உரித்து, அதில் உள்ள நீரைப் பருகச் செய்து, தன் அன்பை வெளிப்படுத்தியது.
6. உருவக அணியை எடுத்துக்காட்டுடன் எழுதுக
- உவமையின் தன்மையினைப் பொருள் மேல் ஏற்றிக் கூறுவது உருவக அணி ஆகும்.
- "இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக"
- இப்பாடலில் இன்சொல்- நிலமாகவும், ஈகை- விதையாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.