1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது?
• நான் பேசும் மொழி தமிழ்.
• இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.
2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
“மானிட மேன்மையைச் சாதித்திட குறள் மட்டுமே போதுமே ஓதி நட” என்ற அடிகள் என்னை மிகவும் ஈர்த்தன.
3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
எதுகையால் தொடுக்கப்படும் இரண்டடிப் பாடலுக்குக் ‘கண்ணி’ என்று பெயர்.
4. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள். இலக்கியங்களின் பாடு பொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?
• அகப்பொருள்
• புறப்பொருள்
5. செய்வினையை செய்ப்பாட்டு வினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக
1. தோசை வைக்கப்பட்டது-படு
2. கோவலன் கொலையுண்டான்-உண்
6. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக
1. மென்பொருள்
2. உலவி
3. செதுக்கி
4. சுட்டி
5. இணைய வெளி
7. வீணையோடு வந்தாள், கிளியே பேசு- தொடரின் வகைகளை சுட்டுக.
1. வீணையோடு வந்தாள்-வேற்றுமை தொடர்
2. கிளியே பேசு-விளித்தொடர்
8. ‘கூவல்’ என்று அழைக்கப்படுவது எது?
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
9. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
1. குளம்
2. கண்மாய்
3. ஓடை
4. கிணறு
10. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே- குறிப்புத் தருக.
புறநானூற்றில் குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று அறிவுரை கூறுகிறார்.
11. நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் காட்சிக்கு பெரிய புராணம் எதனை ஒப்பிடுகிறது?
வாளை மீன்கள் துள்ளி எழுந்து, அருகில் உள்ள பாக்கு மரங்களில் மீது பாயும் காட்சி வானவில்லைப் போல இருந்தது.
12. மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழல் காடும் உடையது அரண். இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
1. நீர் நிலைகள்
2. நிலப்பகுதி
3. மலைகள்
4. அடர்ந்த காடுகள்
13. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
1. ஜல்லிக்கட்டு
2. மஞ்சுவிரட்டு
3. மாடு பிடித்தல்
14. தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?
அகழாய்வு மூலம் பழந்தமிழரின் பண்பாட்டை, அறிவியலை, வரலாற்றை அறிய முடியும் என்பதால் அகழாய்வு செய்யப்பட வேண்டும்.
15. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
1. கண்ணுடையம்மன் பள்ளு ‘எருதுகட்டி’ என்கிறது.
2. கலித்தொகை, சிலப்பதிகாரம், புறப்பொருள்வெண்பாமாலை ஆகிய நூல்கள் ‘ஏறுகோள்’ என்று குறிப்பிடுகின்றன.
16. பழமணல் மாற்றமின்; புதுமணல் பரப்புமின்- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
1. இடம்: மணிமேகலை- விழாவறை காதை
2. பொருள் விளக்கம்: இந்திர விழாவை முன்னிட்டு தெருக்களிலும் மன்றங்களிலும் பழமணலை மாற்றிவிட்டு புது மணலைப் பரப்புமாறு முரசறைவோன் அறிவிக்கிறான்.
17. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.
1. கருவந்துறை-சேலம்
2. கரிக்கையூர்-நகல்
3. கல்லூத்து மேட்டுப்பட்டி- மதுரை
4. சித்திரக்கல் புடவு-தேனி
18. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டி கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.
1. கூட்டுப்புழுதான் பட்டுப்பூச்சியாகும்.
2. எனவே, பொறுமை அடக்கத்தை மீறக்கூடாது.
19. இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.
1. தானியங்கிப் பண எந்திரம்
2. அட்டை தேய்ப்பு இயந்திரம்
3. திறனட்டைக் கருவி
4. ஆளறிச் சோதனைக் கருவி
5. வங்கிக் கணக்கு அச்சுப்பொறி
20. மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
-இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும் மூவறிவு, நாலறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
• மூவறிவு-எறும்பு கரையான் போன்றவை
• நாலறிவு- நண்டு, தும்பி போன்றவை.
• ஐந்தறிவு- பறவை, விலங்குகள்
21. செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றித் திரு. சிவன் கூறுவது யாது?
1. செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும்.
2. அதைப் பயன்படுத்தி வாகனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.
22. நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?
தம்மை இகழ்பவரிடம் நிலம் போலப் பொறுமை காக்க வேண்டும்
23. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்-இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.
தீயவை தீயவற்றையே தருவதால், அவற்றை தீயை விடக் கொடியதாகக் கருதி, தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்ச வேண்டும்.
24. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்-இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எடுத்து எழுதுக.
1. மோனை
i. ஒற்றொற்றித்
ii. ஒற்றினால்
2. எதுகை
i. ஒற்றொற்றித்
ii. ஒற்றினால்
25. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
சொல்வேறு, செயல்வேறு என்று இருப்பவரின் நட்பு கனவிலும் இனிக்காது.
26. தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் எது?
பெண் கல்வி பெறுதல்
27. மூவாது மூத்தவர் நூல் வல்லார் -இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.
வயதில் இளையவராக இருந்தாலும், நன்மை தீமைகளை நன்குணர்ந்தவர், மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.
28. நீங்கள் மிகவும் விரும்பி படித்த நூல்கள் எவை?
1. திருக்குறள்
2. புறநானூறு
3. நாலடியார்
4. கம்பராமாயணம்
29. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்காக சாரதா சட்டம் இயற்றப்பட்டது.
30. செப்பு திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.
சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.
31. நடுகல் என்றால் என்ன?
போரில் விழுப்புண்பட்டு இறந்தவருக்கு நடப்படும் கல்லே நடுகல் ஆகும்.
32. இசைத்தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டது?
இசைத்தூண்கள் விஜயநகர மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டது.
33. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
கண்ணன் புகுந்த பந்தலில் முத்து மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது.
34. இடிகுரல், பெருங்கடல் இலக்கணக்குறிப்புத் தருக.
1. இடிகுரல் -உவமைத்தொகை
2. பெருங்கடல்- பண்புத்தொகை
35. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
பாலைக்காயை சிறுவர்கள் அடித்து விளையாடும் ஓசையைக் கேட்டு அஞ்சிப் பருந்துகள் பறந்தன.
36. இறக்கும் வரை உள்ள நோய் எது?
சொன்னாலும் செய்யாமல் தானாகவும் செய்யாமல் இருப்பவனின் உயிர், இறக்கும் வரை உள்ள நோய் போன்றது.
37. அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு ஐந்து சால்பு ஊன்றிய தூண்- இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக.
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய குணங்களையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாக உருவகப்படுத்தி, சான்றாண்மையை வீடாகவோ அல்லது கட்டிடமாகவோ உருவகப்படுத்தாமல் விட்டுவிட்டதால், இஃது ஏகதேச உருவக அணி ஆகும்.
38. உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?
1. உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் உழவர்
2. மற்ற தொழில் செய்பவரை உழவரே தாங்கி நிற்கின்றார்.
39. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான் கண்டவாறு-இக்குறட்பாவில் பயின்று வரும் தொடை நயத்தை விளக்குக.
1. மோனை
i. காணாதான்
ii. கண்டானாம்
2. எதுகை
i. காணாதான்
ii. காணாதான்
40. இந்தியத் தேசிய இராணுவத்தில் குறிப்பிடத்தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?
1. ஜானகி
2. ராஜாமணி
3. கேப்டன் தாசன்
4. கேப்டன் லட்சுமி
5. லோகநாதன்
41. தாய் நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
1. இந்திய இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன்
2. தாய்நாட்டிற்குச் சேவையாற்ற விரும்புகிறேன்.
42. மதுரைக்காஞ்சி-பெயர்க் காரணத்தை குறிப்பிடுக.
1. மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும்
2. நிலையாமையைப் பற்றிப் பாடுவதாலும் மதுரைக்காஞ்சி எனப் பெயர் பெற்றது.
43. உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும், சந்தையில் காணும் பொருட்களையும் ஒப்பிட்டு எழுதுக.
1. எங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்கள்:
i. பட்டாசு
ii. தானியங்கள்
iii. காய்கறிகள்
2. சந்தையில் காணும் பொருள்கள்:
i. பருப்பு வகைகள்
ii. பாத்திரங்கள்
iii. காய்கறிகள்
44. கருக்கொண்ட பச்சைச்பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?
கருக்கொண்ட பச்சைப் பாம்பு, பால் பிடித்த நெற்பயிருக்கு உவமையாக்கப்பட்டுள்ளது.
45. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ- இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
1. சேறு-அள்ளல்
2. வயல்-பழனம்
46. டெல்லி நோக்கிச் செல்லுங்கள் -என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?
டெல்லி நோக்கி செல்லுங்கள் என்ற முழக்கம் நேதாஜியால் 1943 ஜூலை 9 இல் செய்யப்பட்டது.
47. பகுத்தறிவு என்றால் என்ன?
ஏன்? எதற்கு? எப்படி? என்று வினாக்களை எழுப்பி, அறிவியல் அடிப்படையில் சிந்தித்து முடிவெடுப்பது பகுத்தறிவாகும்.
48. தாவோ தேசிங் இன்னொரு பக்கம் என்று எதைக் குறிப்பிடுகிறது?
தாவோ தேஜிங் இன்னொரு பக்கம் என்று ‘இருத்தலின்மையைக்’ குறிப்பிடுகிறது.
49. கமுகுமரம் எதைத் தேடியது?
கமுகுமரம் ஒளியாகிய உயிர்ப்பைத் தேடியது.
50. யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னன்.
51. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
1. அசை இரண்டு வகைப்படும். அவை,
i. நேரசை
ii. நிரையசை
52. தமிழ்ச் சான்றோருக்கும் உரோமையச் சான்றோருக்கும் உள்ள வேறுபாடு யாது?
1. தமிழ்ச் சான்றோர் “ஒன்றே உலகம்” என்ற பார்வையில் எழுதினர்.
2. உரோமையச் சான்றோர், உரோமையரைக் கருதியே எழுதினார்.
53. பிடிபசி களைஇய பெருங்கை வேழம்- இவ்வடியில் உள்ள இலக்கணக்குறிப்புகளைக் கண்டறிக.
1. பிடிபசி-வேற்றுமைத்தொகை
2. களைஇய- சொல்லிசை அளபெடை
3. பெருங்கை- பண்புத்தொகை
54. குறுந்தொகை -பெயர்க்காரணம் தருக.
குறுகிய அடிகளை (4 முதல் 8 அடி) உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.
55. நினைத்தேன் கவித்தேன் படைத்தேன் சுவைத்தேன்- இத்தொடரில் அமைந்துள்ள உருவகத்தைக் கண்டறிக.
கவி ஆகிய தேன் (உருவகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக