சனி, 27 ஜூலை, 2024

மெல்லக் கற்போர் இயல் 1,2

 


ஒன்பதாம் வகுப்பு 

உரிய விடையைத் தேர்வு செய்க 

குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க 

வங்கம், மானு, தாழிசை, பிறவினை

தமிழ்விடு தூது______ என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது

சிற்றிலக்கியம்

விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக 

மூன்று, நூறு, பத்து, எட்டு

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே- எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே-- இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்….

மோனை, எதுகை, இயைபு

அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கண குறிப்பு…

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன?

கீழே

நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது? 

புலரி

பொருத்தமான விடையைத் தேர்க

நீரின்றி அமையாது உலகு- திருவள்ளுவர் 

நீரின்றி அமையாது யாக்கை- ஔவையார் 

மாமழை போற்றுதும்- இளங்கோவடிகள்

அ, ஆ, இ

பொருத்தமான வினையை எடுத்து எழுதுக. 

கதிர் அலுவலகத்தில் இருந்து விரைவாக_______.

அவன் பையன் பள்ளியில் இருந்து இன்னும்_________.

வந்துவிட்டான், வரவில்லை

மல்லல் மூதூர் வயவேந்தே-கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

வளம்


மொழிபெயர்க்க 

Linguistics -மொழியியலாளர்

Literature -இலக்கியம்

Philologist-தத்துவவியலாளர்

 Polyglot --பன்மொழிப் புலவர் 

Phonologist-ஒலியியலாளர்

Phonetics -ஒலிப்பியல்

Every flower is a soul blossoming in nature -ஒவ்வொரு மலரும் இயற்கையில் மலரும் ஓர் ஆன்மா

Sunset is still my favourite colour and rainbow is second -வானவில்லை விட கருப்புதான் எனக்கு இன்றும் பிடித்த நிறம்

An early morning walk is blessing for the whole day-அதிகாலை நடைப்பயிற்சி நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தருகிறது

Just living is not enough…one must have Sunshine, freedom and a little flower.-உயிர் வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல. வாழ்வதற்கு நம்பிக்கை ஒளி, சுதந்திரக் காற்று மற்றும் அன்பு நீர் ஆகியவை அவசியம்.


கலைச்சொல் தருக

Conical stone -குமிழிக் கல்

Water management -நீர் மேலாண்மை

Irrigation technology -பாசனத் தொழில்நுட்பம்

Tropical Zone –வெப்பமண்டலம்

Morpheme-உருபன்

Phoneme-ஒலியன்

Comparative grammar -ஒப்பிலக்கணம்

Lexican-பேரகராதி


தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து 

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் 

கல்லாடம் படித்தவரோடு மல்லாடாதே

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு


அகராதியில் காண்க 

நயவாமை- விரும்பாமை 

கிளத்தல் -சொல்லுதல் 

கேழ்பு -நன்மை 

செம்மல்- சிறந்தோன் 

புரிசை- மதில்

கந்தி -வாசனை 

நெடில் -மூங்கில் 

பாலி -ஆலமரம் 

மகி- பூமி 

கம்புள்- வானம்பாடி 

கைச்சாத்து- கையெழுத்து

பிழை நீக்கி எழுதுக

சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தி கொண்டு தான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்

மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்..

மழையே பயிர்க் கூட்டமும் உயிர்க் கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது

நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்

சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான் 

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக

அரிசி போடுகிறேன்- தினமும் அரிசி போடுகிறேன்

மழை பெய்தது- நேற்று மழை பெய்தது. 

வானவில்லைப் பார்த்தேன்- நான் வானவில்லைப் பார்த்தேன்.

குழந்தை சிரித்தது- குழந்தை அழகாய்ச் சிரித்தது.

எறும்புகள் போகின்றன-எறும்புகள் வரிசையாகப் போகின்றன.

படம் வரைந்தான்- யானை படம் வரைந்தான்.

குறுவினா

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது? 

திராவிட மொழிக் குடும்பம்

தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

நிகரிலாக் காப்பியப் பூவனங்கள்

கண்ணி என்பதன் விளக்கம் என்ன?

இரண்டிரண்டு அடிகளைக் கொண்ட செய்யுள்

கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக 

மென்பொருள்

உலவி

செதுக்கி

சுட்டி 

இணைய வெளி

அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் -அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்- இலக்கியங்களின் பாடுபொருளாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

அக இலக்கியம் 

புற இலக்கியம்

செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக

முருகனால் செய்யப்பட்டது 

கோவலன் கொலையுண்டான்

வீணையோடு வந்தாள், கிளியே பேசு- தொடரின் வகைகளைச் சுட்டுக

வீணையோடு வந்தாள்-வேற்றுமைத் தொடர்

கிளியே பேசு-விளித்தொடர்

கூவல் என்று அழைக்கப்படுவது எது? 

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

ஓடை, குளம், கண்மாய், கிணறு.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே- குறிப்புத் தருக.

உடல் உணவால் அமையும். 

அதனால், உணவைத் தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார் 

நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்கு பெரிய புராணம் எதனை ஒப்பிடுகிறது? 

அன்னம் நீந்தும். 

எருமை கலக்கும். 

வாளைமீன் துள்ளிப் பாயும். 

மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் -இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

நீர், நிலம், மலை, காடு.


சிறு வினா

சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?

எறிதிரை-எறுதிரான்

கலன்-கலயுகோய்

நீர்-நீரிய, நீரியோஸ் 

நாவாய்-நாயு

தோணி -தோணீஸ்

திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழியின் சிறப்பு இயல்புகளை விளக்குக.

தென் திராவிட மொழிகள்

நடுத்திராவிட மொழிகள்

வட திராவிட மொழிகள் 

தமிழ் மொழியின் சிறப்புகள்:

தொன்மை

இலக்கண இலக்கிய வளம்

சொல்வளம்

மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

மூன்று -தமிழ்

மூணு-மலையாளம்

மூடு-தெலுங்கு

மூரு-கன்னடம் 

மூஜி-துளு

காலந்தோறும் தமிழ் மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது? 

ஓலைச்சுவடி 

கல்வெட்டு 

செப்பேடு 

காகிதம்  

கணினி

வளரும் செல்வம் உரையாடலில் குறிப்பிடப்படும் பிற மொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.

எறுதிரான்-எறிதிரை

பாய்யியோனா- பா

சாப்போ-செப்பல் ஓசை 

சேப்பிக் ஸ்டேன்சா- வெண்பா 

இளிகியா-இளிவரல்

தன்வினை, பிறவினை- எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

தன்வினை 

முருகன் பந்தை உருட்டினான். 

எழுவாய் ஒரு வினையை செய்தால் அது தன்வினை எனப்படும். 

பிறவினை 

முருகன் பந்தை உருட்ட வைத்தான் 

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்.

புதுக் கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

சங்க இலக்கியங்களைப் படிப்பேன். 

இலக்கணங்களைக் கற்றுத் தெளிவேன். 

காப்பியங்களைப் படித்துச் சுவைப்பேன். 

படங்களுடன் சுவடி செய்வேன்.

அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை. அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக. 

ஏரிகளைத் தூர்வார வேண்டும்.

நெகிழியைத் தவிர்க்க வேண்டும்

கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும்

நீர்நிலைகளைப் புனரமைக்க வேண்டும்.

நிலைத்த புகழைப் பெறுவதற்கு குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை? 

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தவர் ஆவர்.

பள்ளமான நிலங்கள்தோறும் நீர்நிலைகளை உருவாக்குபவர் நிலைத்த புகழைப் பெறுவார்

சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

குமிழித்தூம்பின் நீரோடித் துளையிலிருந்து நீர் வெளியேறும். 

கீழே உள்ள சேறோடித் துளையில் இருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். 

இதனால் தூர்வார வேண்டிய அவசியம் இல்லை.

பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

கிளை விரித்திருந்த மரம் இன்று காய்ந்து, பட்டைகள் உரிந்து, கட்டை என்னும் பெயர் பெற்றது 

மொட்டைக் கிளையோடு வெட்டப்படும் நாளை எண்ணிக் கவலை அடைந்தது. 

நெடுவினா

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

ஒப்பியல் ஆய்விற்குப் பெருந்துணை- தமிழே

தொன்மையானது

இலக்கிய வளமும் இலக்கணச் சிறப்பும் வாய்ந்தது 

பிறமொழித் தாக்கம் குறைவு

தாய்மொழி

தனித்து இயங்கும் மொழி 

சொல்வளம் மிகுதி

கல்வெட்டுகள் அதிகம்.

தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

தூதிற் சிறந்த தமிழே!

அமுதே! 

முத்திக்கனியே!  

முத்தமிழே!

பள்ளு, குறம்

மூன்று பாவினம்

சிந்துப்பா

பத்துக்குணங்கள்

நூறு வண்ணங்கள்

ஒன்பது சுவைகள்

எண்வகை அழகுகள்

நீரின்றி அமையாது உலகு- என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

நீரின்றி அமையாது உலகு

வான் சிறப்பு -வள்ளுவர் 

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் -இளங்கோவடிகள்

நீரே மனித வாழ்வின் அடிப்படை 

நீர் உணவாகும்

நீர் அரணாகும்

திருமஞ்சனம் ஆடல் 

நீராடல் பருவம் 

மஞ்சள்நீர் கொடுத்தல்

கடலாடுதல்

தலைக்குத் தண்ணீர் ஊற்றுதல்

சனி நீராடுதல்

ஏரிகளைத் தூர்வார வேண்டும்.

ஜூன் 5ஆம் நாள்- உலகச் சுற்றுச்சூழல் நாள்

பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக 

திருநாட்டுச் சிறப்பு

காவிரி ஆற்றுச் சிறப்பு

களையெடுக்கும் உழத்தியர் 

நாடெல்லாம் நீர்நாடு 

வானவில் காட்சி

மலைகளை ஒத்த வளங்கள்

மலைசூழும் மேகக்காட்சி 

பல்வகை மரங்கள் 

‘தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

தண்ணீர்

உலகம்மாள் கோவில் கிணறு முன்பு செழித்து இருந்தது.

தற்போது பிலாப்பட்டியில் மட்டுமே நல்ல தண்ணீர் இருக்கிறது

ரயில் நிலையத்திற்குத் தண்ணீர் பிடிக்க இளம்பெண்கள் சென்றார்கள்

இந்திரா ஊதல் ஒலி கேட்ட பிறகும் தண்ணீர் பிடித்தாள்.

ரயில் கிளம்பியது.

ரயிலோடு இந்திரா போனதை அறிந்து ஊரார் தேடினர்

தண்ணீர்க் குடத்தோடு இந்திரா வந்தாள்

கடிதம் எழுதுக.

உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் “கால் முளைத்த கதைகள்”என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

நண்பனுக்குக் கடிதம்

சங்கரலிங்கபுரம்,

28-07-2024.

அன்புள்ள நண்பா/தோழி,

     நலம். நலமறிய ஆவல். கடந்த வாரம் என்னுடைய பிறந்தநாள் பரிசாக, நீ அனுப்பிய, எஸ்.இராமகிருஷ்ணனின் “கால் முளைத்த கதைகள்” என்னும் நூலைச் சுவைத்து மகிழ்ந்தேன். ரகசியங்களைப் பற்றிக் கதை சொல்கிறது, “கால் முளைத்த கதைகள்” என்னும் நூல்.  எல்லை விரியும் கற்பனைகள் நிறைந்த இந்நூலை நீயும் சுவைத்து மகிழ இத்துடன் அனுப்பி வைக்கிறேன்.  நீ படித்து விட்டு மடல் எழுது. 

அன்பு நண்பன்/தோழி,

கம்பன்

உறைமேல் முகவரி 

பெறுநர்

     தமிழரசன்

     2, கபிலர் தெரு,

     விருதுநகர்.

வரவேற்பு மடல் எழுதுக

சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்று எழுதுக.

வரவேற்பு மடல்

இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம் 

நாள்:28.07.2024

நேரம்: காலை 11 மணி

வெற்றியின் நாயகரே வருக!

“சுத்தம் சோறு போடும்” என்னும் பழமொழியே எங்கள் பள்ளியின் தாரக மந்திரம். சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலே சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்த நடுநிலை நாயகரே! 

கடமை வீரரே! சுற்றுச்சூழலைப் பேணிக்காக்க பெருமுயற்சி எடுத்தவரே!

எமது மாவட்டக் கல்வி அலுவலரே! உங்களை “வருக வருக” என வரவேற்பதில் எம்பள்ளி பெருமை கொள்கிறது.

நன்றி!

இவண்

மாணவ மாணவியர்

அரசு மேல்நிலைப்பள்ளி 

சங்கரலிங்கபுரம்


நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க

உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.

உலகத் தாய்மொழி தின விழா

அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம்

இடம்:பள்ளி வளாகம் 

நாள்:28.07.2024

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து 

வரவேற்புரை 

தலைமை உரை 

சிறப்பு விருந்தினர் உரை 

வாழ்த்துரை 

நன்றியுரை 

நாட்டுப்பண் 

அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் !!!

இவண் 

தலைமை ஆசிரியர் 

அரசு மேல்நிலைப்பள்ளி 

சங்கரலிங்கபுரம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

கவிதை

கண்ணில் தோன்றும் இக்காட்சி-மனக்

கண்ணில் நீளுது அதன்நீட்சி !

என்னைக் கவருது இக்காட்சி -என்னை

என்னவோ செய்யுது ஆட்சி !

உண்மையை உள்ளம் உணருது-உள்ளம் 

உரக்கச் சொல்லத் துடிக்குது !!

எண்ணங்கள் பலவாய் விரியுது-என்றன் 

எழுத்துகள் கவியாய் மலருது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக