வெள்ளி, 27 நவம்பர், 2020

தமிழகத்தின் நீர் நிலைப் பெயர்களும் விளக்கமும்

தமிழகத்தின் நீர் நிலைப் பெயர்களும் விளக்கமும்

அகழி- கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்



அருவி- 

மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது



ஆழிக்கிணறு-

கடலருகே தோண்டிக் கட்டியகிணறு



ஆறு-

பெருகி ஓடும் நதி 



இலஞ்சி 

பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்



உறைக்கிணறு- 

மணற்பாங்கான இடத்தில் தோண்டிச்சுடுமண் வளையமிட்ட கிணறு





ஊருணி -

மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை 


ஊற்று -

அடியிலிருந்து நீர் ஊறுவது 



ஏரி -

வேளாண்மைப் பாசன நீர்த் தேக்கம் 



கட்டுக்கிணறு- 

சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு 



கடல் -சமுத்திரம் 



கண்மாய்- 

பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்



குண்டம் -

சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை 



குண்டு -

குளிப்பதற்கு ஏற்ற சிறுகுளம் 



குமிழி ஊற்று -

அடி நிலத்து நீர், நில மட்டத்திற்குக் கொப்பளித்து வரும் ஊற்று 



கூவல் -

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை 



கேணி -

அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு 



சிறை -

தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை 



புனற்குளம்- 

நீர்வரத்து இன்றி, மழை நீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை 



பூட்டைக் கிணறு -

கமலைநீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக