யாருக்கு சொர்க்கம் கிடைக்கும்?
யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை பகர்கிறது சிறுபஞ்சமூலம்.
பாடல்:
குளம் தொட்டுக் கோடு பதித்து வழி சீத்து
உளம் தொட்டு உழுவயல் ஆக்கி- வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வகைப் பாற்படுத்தான்
ஏகும் சொர்க்கத்து இனிது.
- குளத்தை வெட்டி
- அதற்குக் கரை அமைத்து
- அந்தக் குளத்திற்கு நீர் வரும் வழிகளைச் சீரமைத்து
- உள்ளம் மகிழ்ந்து விளைநிலம் ஆக்கி
- நீர்வளம் மிக்க பலவகைக் கிணறுகளை உண்டாக்குபவன் சொர்க்கத்தை அடைவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக