காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
கூண்டுக் கிளியாய்க் கூட்டினை விரும்பாத மீனே!
விடுதலையெண்ணி சிறகெனுந் துடுப்பைச் சீட்டியடித்த கண்ணே!
இலக்குத்தவறித் தனிச்சிறைக்குள் விழுந்திடாதே..! கடுந்துன்பத்தில் உழன்றிடாதே..!
உனக்கு நீலக்கடலே எல்லை- என்ற
உண்மையை மனிதர் உணரவில்லை..!
உணர்வும் உரிமையும் உயிர்களுக்கும் பொதுவே..!
பிறர் துன்பத்தில் இன்பம் காண்பது எப்படித் தமிழர் அறமாய் ஆகும்..?
மீனுக்கும் மனத்திற்கும் விடுதலையை அளிப்போம்..!
கடற்கரை சென்று உவப்போம்..! கவின்காட்சிகளில் கவலைகளை மறப்போம்..!
புத்துணர்ச்சி பெறுவோம்..! புதுஉலகம் படைப்போம்…!
– மலர் மகேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக