இயல் 3
ஒன்பதாம் வகுப்பு
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
தலைப்பு: கவின்கலைகள்
ஆயக் கலைகள் அறுபத்து நான்கு
ஆய்ந்தெ டுத்து நீயும் பழகு
மனத்தை மயக்கும் மேடைக் கலைகள்…
மனக்கவலை நீக்கி மகிழ்ச்சி தருமே..!
குழலும் யாழும் குயிலிசை வெல்லும்…
கதகளி பரதம் பக்தியில் செல்லும்…
மேளமும் பறையும் இடியென முழங்கும்…
தொடையும் பாட்டும் துணையென விளங்கும்
பசியும் பகையும் மறந்தே போகும்
இயலிசை நாடகம் மருந்தென ஆகும்..!
– மலர் மகேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக